என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "offering"
- கிரீடம், வைர கம்மல் காணிக்கை.
- வருகிற 6-ந்தேதி அணிவிக்கப்பட உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அன்னவரத்தில் பிரசித்தி பெற்ற சத்யதேவர், அனந்த லட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு கச்சபுரத்தை சேர்ந்த சத்திய பிரசாத் அவரது மனைவி சூர்யா கலா ரூ.1½ கோடி மதிப்பில் தங்க கிரீடத்தில் 130 கேரட் வைரம் பதித்த கிரீடம், வைரக் கம்மல் காணிக்கையாக வழங்கினா்.
இந்த வைர கிரீடம் சத்ய தேவர் பிறந்த நட்சத்திரமான மகர நட்சத்திரத்தில் வருகிற 6-ந் தேதி அனந்த லட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அணிவிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் கோவில் தேவர் மண்டபத்தில் எண்ணும் பணி நடை பெற்றது.
- 401 கிராம் தங்கம், 2 கிலோ 475 கிராம் வெள்ளி ஆகிய வற்றை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.
பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் கோவில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷா, சுரேஷ்பாபு, நாகன், மோகனன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்களைக் கொண்டு எண்ணும் பணி நடை பெற்றது.
இதில் கடந்த 15 நாட்களில் ரூ.65 லட்சத்து 48 ஆயிரத்து 194 ரொக்கப்பணம் மற்றும் 401 கிராம் தங்கம், 2 கிலோ 475 கிராம் வெள்ளி ஆகிய வற்றை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.
இதேபோல் திருப்பணி உண்டியல் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 469 காணிக்கை செலுத்தி உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவில் வசந்த மண்டபத்தில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
- வெளிநாட்டு கரன்சிகள் 424 கிடைக்கப்பெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.
இதன்படி செப்டம்பர் மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் நேற்று கோவில் வசந்த மண்டபத்தில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர்கள், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக் குழுவினர்கள் ஈடுட்டனர்.
இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 76 லட்சத்து 88 ஆயிரத்து 763, ஆவணி திருவிழா தற்காலிக உண்டியல் மூலம் ரூ.25 ஆயிரத்து 520, மேல கோபுர திருப்பணி உண்டியல் மூலம் ரூ.875, கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.19 ஆயிரத்து 711, யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 89, கோவில் அன்னதானம் மூலம் ரூ.15லட்சத்து 8 ஆயிரத்து 214, மேல கோவில் உண்டியல் மூலம் ரூ.15 ஆயிரத்து 113, நாசரேத் கோவில் மூலம் ரூ. 1,315, கிருஷ்ணாபுரம் கோவில் மூலம் ரூ.7ஆயிரத்து 432ம் என மொத்தம் ரூ.2 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரத்து 32 கிடைத்தது.
இதுபோக தங்கம் 2 கிலோ100 கிராம், வெள்ளி 19 கிலோ, பித்தளை 35 கிலோ, செம்பு 4 கிலோ, தகரம் 3 கிலோ, மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 424 கிடைக்கப்பெற்றது.
உண்டியல் எண்ணும் பணியில் அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில் முருகன், தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வாளர் செந்தில் நாயகி, பொதுமக்கள் பிரதிநிதியாக மோகன், சுப்பிரமணிய மணியன், அயல் பணி மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.
- தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைப்பார்கள்.
- பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற முக்கிய தலங்களில் பிரம்மோற்சவம் நடக்கும். குலதெய்வ பூஜைகளை செய்யவும் காணிக்கை, நேர்த்தி கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் சிறந்தது. புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை துறந்து விரதம் இருப்பார்கள். சனிக் கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சுண்டல், வடை பாயாசம், நைவேத்யமாக படைத்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி நாராயணா... கோபாலா... கோவிந்தா... என்று திருநாமங்களை உரக்க கூறியபடி வீடு வீடாக சென்று பணம், அரிசி, தானம் பெறுவர். பணத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர்.
பல இடங்களில் உறியடி திருவிழாவும், பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். அனைத்து விஷ்ணு தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும்.குடும்பத்தினருடன் பெருமாள் தலங்களுக்கு பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன் காணிக்கை செலுத்துபவர்களும் உண்டு. புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் சனிக் கிழமை விரதம் சர்வ மங்களங்களையும் அருளும்.
அதுவும் மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு அதி சிறப்பானது. இந்த மாதத்தில் செய்யும் தானதர்மம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. சனிக்கிழமை அன்று இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்கள், தொழுநோயாளிகள், பாரம் சுமப்பவர்கள், முதியோர்கள் போன்றவர்களுக்கு உணவு, உடை வழங்குவது சிறந்த புண்ணியமாக சொல்லப்படுகிறது. சனி திசை நடப்பில் இருப்பவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தால் தடைகள் நீங்கும். சுபயோக சுபயோகம் கூடிவரும்.
- ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
- மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே நல்லூரில் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
விழாவை யொட்டி நல்லூர் பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் பாபநாசம் ஸ்ரீகலைக்கோயில் இசை பள்ளியை சேர்ந்த மாணவிகள் இணைந்து ராதே, கிருஷ்ணன் வேடமணிந்து பங்கேற்ற கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து உறியடி உற்சவமும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை நல்லூர் ராஜா பாடசாலை நிர்வாகிகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
- பணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
- ரூ.27 லட்சத்து 90 ஆயிரத்து 250 ரொக்கம் காணிக்கை வசூலானது.
சுவாமிமலை:
சுவாமிமலை சுவாமிநா தசாமி கோவிலில் உள்ள 12 உண்டியலில் பொதுமக்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த பணியில் கும்பகோ ணம் கே.எஸ்.கே கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த பணிகளை கோவிலின் உதவி ஆணையர் முத்துராமன், துணை ஆணையர்உமா தேவி, கண்காணிப்பாளர் பழனிவேல், ஆய்வாளர் வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதில் பொதுமக்கள் செலுத்திய காணிக்கை ரூ.27 லட்சத்து 90 ஆயிரத்து 250 ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 2 கிலோ 932 கிராம் வெள்ளியும், 204 வெளிநாட்டு கரன்சி களம் பெறப்பட்டு, அவை அனைத்தும் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்ப ட்டன.
- பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.
- கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் பகவதிபடி பகுதியை சேர்ந்தவர் சசிதரன்பிள்ளை மகள் சங்கீதா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனி கோவிலுக்கு வந்தார். பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.
பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கடிதம் மூலம் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர். உண்டியல் சட்டத்தின்படி உண்டியலில் செலுத்திய பொருட்களை திரும்ப வழங்க வழியில்லை. ஆனால் பக்தரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோவில் அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில் ரூ.1லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17.460 கிராமம் எடையுள்ள புதிய தங்கசங்கிலியை வழங்கினார்.
கோவில் தலைமை அலுவலகத்தில் சங்கீதாவிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.
- மீனாட்சி அம்மன் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
- கோவில் துணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாள் சித்திரை திருவிழா நடந்து முடிந்தது. இந்த நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் துணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில், இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோவில் ஆகிய 10 கோவில்களிலும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை என்னும் பணி நடந்து வருகிறது.
இதற்கான பணிகளில் கோவில் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள், பக்தர் பேரவையினர் மற்றும் ஒய்வு பெற்ற வங்கி அலுவலர்கள் உள்பட சுமார் 250-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.
மீனாட்சி அம்மன் ேகாவில் மற்றும் உப கோவில்களில் காணிக்கை என்னும் பணி, இணையதள யூ-டியுப் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
- இறைவன் தானாகவே விரும்பிவந்து எழுந்தருளி தலங்கள் மிகவும் சிறப்புக்குரியவை.
- பக்தர்கள் உண்டியல்காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 6அடிஉயரத்தில் 4 பிரமாண்டமான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது
கடலூர்:
இறைவன் தானாகவே விரும்பிவந்து எழுந்தருளி தலங்கள் மிகவும் சிறப்புக்குரியவை.அப்படிசிவபெருமான்விரும்பிஎழுந்தருளிபிரசித்திப்பெற்றதுதிருவதிகை வீரட்டானேஸ்வரர்கோவில். இங்கு அருள்பாலிக்கும் வீரட்டானேஸ்வரரை தரிசிக்கும் பக்தர்கள் உண்டியல்காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 6அடிஉயரத்தில் 4 பிரமாண்டமான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
சாமியை தரிசனம் செய்து விட்டு, வெளியே வரும் வழியில் தான் காணிக்கைஉண்டியல் வைக்கப்பட்டுள்ளது.இந்த காணிக்கை உண்டியல்கள் திறப்பு கோவில் நிர்வாகத்தினர், கிராம பொதுமக்கள், கட்டளைதாரர்கள் முன்னிலையில் இன்று காலை நடந்தது
- உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள், உள்பட 200-க்கும் மேற்பட்டோர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
- ரூ.22 லட்சத்து 73 ஆயிரத்து 717-ம், 51 கிராம் தங்கமும், 261 கிராம் வெள்ளியும், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பணமும் இருந்தது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 17 உண்டியல்கள் அமைக்கப்–பட்டுள்ளன. இந்த உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் கடந்த 2022ம்ஆண்டு ஆகஸ்டு மாதம் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சுவாமிமலை துணை ஆணையர் உமாதேவி முன்னிலையில், ஆய்வாளர் தனலெட்சுமி மற்றும் கோவில் செயல்அலுவலர் கோ.கிருஷ்ணக்குமார் மேற்பார்வையில் முன்தினம் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது.
உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள், கோவில் பணியாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் காணிக்கையாக ரூ.22 லட்சத்து 73 ஆயிரத்து 717-ம், 51 கிராம் தங்கமும், 261 கிராம் வெள்ளியும், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பணமும் இருந்தது.
- அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோ விலில் சமீபத்தில் நடந்த தைப்பூச தேர்திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு எதிரில் உள்ள 2-ம் எண் உண்டியல் நிரம்பியது.
- இதனையடுத்து கோவில்களில் உள்ள 11 உண்டியல்களை திறந்து எண்ண முடிவு செய்யப்பட்டது. அதன் படி உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோ விலில் சமீபத்தில் நடந்த தைப்பூச தேர்திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு எதிரில் உள்ள 2-ம் எண் உண்டியல் நிரம்பியது.
இதனையடுத்து கோவில்களில் உள்ள 11 உண்டியல்களை திறந்து எண்ண முடிவு செய்யப்பட்டது. அதன் படி உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது . இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இளையராஜா மற்றும் ரமணி காந்தன் மற்றும் போலீஸ் அதிகாரி கள் முன்னிலையில் உண்டி யல்கள் திறக்கப்பட்டன.
காணிக்கைகளை எண்ணும் பணியில் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் என பலரும் ஈடுபட்டனர். முதல் கட்டமாக பிரதான 4 உண்டியல்கள் திறந்து எண்ணப் பட்டது.
மீதமுள்ள 7 உண்டி யல்கள் திறந்து எண்ணும் பணி தொடரும் என அறநி
லையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உண்டியல் எண்ணும் பணியை புதிதாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர் குழு தலை வர் தங்கமுத்து மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.
- கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நேரில் வந்து சாமி கும்பிட்டு செல்வது வழக்கம்.
- கோவில் ஊழியர்கள் 6 பேர் உட்பட 30 பேர் உண்டியல் எண்ணும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நேரில் வந்து சாமி கும்பிட்டு செல்வது வழக்கம். மேலும் பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல்வேறு விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தி சாமி கும்பிட்டு செல்வார்கள்.
பாடலீஸ்வரர் கோவிலில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் சிவகுமார், ஆய்வாளர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இப் பணியில் கோவில் ஊழியர்கள் 6 பேர் உட்பட 30 பேர் உண்டியல் எண்ணும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று மாலை எவ்வளவு நகை, வெள்ளி பொருட்கள், பணம் என்பது தெரியவரும். மேலும் கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி கடைசியாக உண்டியல் எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்