search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 109600"

    • உரிமையா ளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், பணியாளர்க ளுக்கான விழிப்பு ணர்வுக்கூட்டம் நடை பெற்றது.
    • பாதுகாப்பு முறையில் மோட்டார் வாகனம் மூலம் மட்டும் கழிவுநீர் அகற்றவேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையா ளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், பணியாளர்க ளுக்கான விழிப்பு ணர்வுக்கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் வாசுதேவன் கூறுகையில், நகராட்சியில் உரிய அனுமதி பெறாத வாகனங்கள் ஏதுவும் செப்டிக்டேங்க் எடுப்பதற்கு அனுமதிக்கப்படாது ,கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிய நடைமுறையைப் பின்பற்றா மல் சாலை ஓரங்கள், நீர்நிலைகள்,ஓடைகள் மற்றும் இதர பகுதிகளில் கொட்டு வதை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் அகற்றுவது சம்பந்தமாக தூய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகர ணங்கள் அணிந்து பாதுகாப்பு முறையில் மோட்டார் வாகனம் மூலம் மட்டும் கழிவுநீர் அகற்றவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஈடுப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.

    • கழிவுநீர்-குப்பைகள் தேங்கி தெப்பக்குளம் துர்நாற்றம் வீசுகிறது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை

    மதுரை நகரின் அடை யாளங்களில் ஒன்றாகவும் முக்கிய சுற்றுலா இடமாக வும் உள்ள மாரியம்மன் தெப்பக்கு ளத்தில் கடந்த 2 வருடங்களாக வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் நிரம்பி தெப்பக் குளம் காணப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இதனால் தெப்பக்குளத்தில் வேகமாக தண்ணீர் குறைய தொடங்கியது. இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மாதம் முதல் வாரத்தில் மதுரை மாவட்டத்தில் கோடை மழை கொட்டி தீர்த்தது. மேலும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதனை பயன்படுத்தி மாரியம்மன் தெப்பக் குளத்தில் தண்ணீர் முழுவ துமாக நிரப்பப்பட்டது. ஆனால் தற்போது அந்த தண்ணீர் மாசடைந்துள்ளது. மேலும் குப்பைகளும், கழிவுநீரும், பிளாஸ்டிக் பொருட்களும் தெப்பக்குளத்தில் கலந்துள்ளன. இதன் காரணமாக தற்போது கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    தெப்பக்குளத்தை சுற்றி காலை வேளையில் ஏராள மானோர் நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். மாலை வேளைகளில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் அமர்ந்து பொழுதுபோக்கி செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். தெப்பக்கு ளத்தின் அருகில் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. இந்த நிலையில் மதுரை நகரில் ஒரே பொழுதுபோக்கு இடமாக உள்ள மாரியம்மன் தெப்பக்கு ளத்திற்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றம் காரணமாக அதிருப்தி அடைந்து ள்ளனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே தெப்பக் குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றி தண்ணீரை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • மழைநீர், கழிவுநீர் கலந்து குளம்போல் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாதபடி தேங்கி நிற்கிறது.
    • கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தங்களது பகுதியில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உங்காரனஅள்ளி ஊராட்சியில் ராமன்நகர் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 மாதமாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2 தினங்களாக பெய்த மழையால் தரமற்ற முறையில் போடப்பட்ட சாக்கடை கழிவுநீர் கால்வாயின் சிமெண்ட் தளம் சேதமாகி ஒருபுறம் சரிந்தது.

    இதனால் சாலையில் மழைநீர், கழிவுநீர் கலந்து குளம்போல் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாதபடி தேங்கி நிற்கிறது.

    இதனால் இச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. புதியதாக அமைக்கப்பட்டு கழிவுநீர் கால்வாயை சரி செய்து, உடனே தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலையில் தேங்கிய நீரில் இறங்கி தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுயதாவது:-

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தங்களது பகுதியில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இங்கு புதியதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் ஒருபுறம் சரிந்து விழுந்தது. தரம் இல்லாமல் தாழ்வாக கட்டப்பட்டதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் பாம்பு, வீச பூச்சிகள் வீட்டிற்குள் நுலையும் நிலை உள்ளது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுவர்கள் தெருக்களில் விளையாடுகிறார்கள். தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தரமற்ற கழிவு நீர் கால்வாய் அமைத்த ஒப்பந்தாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தேங்கிய மழைநீரை அப்புறபடுத்தி கால்வாய் சுற்றுசுவரை தரமாக கட்டி முடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • குளங்கள் கழிவுநீராலும், குப்பைகளாலும் சூழந்து துார்ந்து போகும் நிலையில் உள்ளது.
    • வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்பவர்கள் இந்த குளங்களில் நீராடி செல்வார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லை ஊரா ட்சிக்கு உட்பட்ட புத்துார் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் இங்கு சிவன்கோயில் தெரு குளம், அய்யனார்குளம், தாமரைக்குளம் ஆகிய 3 குளங்கள் உள்ளது.

    இந்த குளங்கள் தற்போது கழிவுநீராலும், குப்பைகள், கருவேல மரங்கள் சூழந்து துார்ந்து போகும் நிலையில் உள்ளது.

    மேலும் தேங்கி உள்ள தண்ணீரால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதிலிருந்து விஷ பூச்சிகள் அப்பகுதியில் உள்ள குழந்தைகளை கடிப்பதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை குளத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    வேளாங்கண்ணிக்கு பாதை யாத்திரையாக செல்பவர்கள் இந்த குளங்களில் குளித்துவிட்டு செல்வார்கள்.

    தற்போது இந்த குளங்கள் தூர்வாரப்படாததால் அதில் தேங்கியுள்ள நீர் அசுத்தமாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் குளத்தை துா ர்வாரி மக்கள் பயன்பா ட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழிவு நீர் கால்வாய் சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை ஒரமாக அமைத்தனர்.
    • சாலையில் செல்வோர்கள், வாகன ஒட்டிகள் மிகுந்த அவதிபட்டு வந்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்றுவட்டாரத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட சூளகிரி-கும்பளம் சாலையில் பகுதியில் கழிவு நீர் கால்வாய் சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை ஒரமாக அமைத்தனர்.

    ஆனால் சிறிய தூரம் மட்டுமே அமைத்து விட்டு சென்றனர். சில இடங்களில் கால்வாய் சரியாக அமைக்கப்படவில்லை. அதனால் கழிவு நீர், மழை நீர் சாலையிலேயே பெருக்கெடுத்து செல்வதால் சாலை ஓர குடியிருப்புகள் வீட்டின் முன்பும், பின்பும் தேங்கி நிற்கிறது.

    இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவு அபாயம் உள்ளது. பல சில ஆண்டுகளாக கொசு தொல்லையிலும் மற்றும் தற்போது தொடர் மழையால் அதிக அளவு மழை நீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி வரதன், பொதுமக்கள் முருகேசன், ராமனன், மற்றும் பலர் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்று அலுவலர் விமல் ரவிக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதையடுத்து நேற்று உடனே நடவடிக்கை மேற்கொண்டு மதியம் சம்பவ இடத்தை சூளகிரி வட்டரவளர்சி அலுவலர் விமல் ரவிக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் டென்சிங் ஆகியோர் பார்வையிட்டு பொதுமக்களிடம் கூறுகையில் நெடுஞ்சாலைதுறை அதிகாரியிடம் பேசி புதிய கால்வாய் அமைத்து கழிவு நீர் சீராக செல்ல வழி வகுக்க உள்ளதாக கூறினர்.

    • நகரின் சாலையோர கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது.
    • கழிவுநீர் கால்வாயை சரியாக சுத்தம் செய்து பராமரிக்காத காரணத்தால் கால்வாய் நிறைந்து கழிவுநீர் தற்போது ரோட்டிலேயே குளமாக தேங்கி கிடக்கிறது.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்ட்டை சேர்ந்த பகுதி சரண்யா நகர். இங்கு சுமார் 40 குடியிருப்புகள் உள்ளன. இந்த நகரின் சாலையோர கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது.

    கழிவுநீர் கால்வாயை சரியாக சுத்தம் செய்து பராமரிக்காத காரணத்தால் கால்வாய் நிறைந்து கழிவுநீர் தற்போது ரோட்டிலேயே குளமாக தேங்கி கிடக்கிறது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தி மையமாக இந்த பகுதி மாறி உள்ளது. எனவே குழந்தைகள் அதிகமாக உள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்காமல் பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என்பது இந்த பகுதி குடியிருப்புவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • உலக நாடுகளில் சீதோசன நிலை பரவலாக மாறி வருகிறது.
    • நாளொன்றுக்கு திருப்பூரில் 13 கோடி லிட்டா் கழிவுநீா் சுத்திகரிக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) பிராண்ட்ஸ்- சோா்சிங் லீடா்ஸ் (பிஎஸ்எல்) நிறுவனம் சாா்பில் சுற்றுச்சூழல் மாசடையாமல் ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை பெருக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது.

    இதில், ஏஇபிசியின் தென்னிந்திய பொறுப்பாளரும், பியோ தலைவருமான ஏ.சக்திவேல் பேசியதாவது:-

    உலக நாடுகளில் சீதோசன நிலை பரவலாக மாறி வருகிறது. சுற்றுச்சூழல் அடுத்த கட்டத்தை நோக்கி நகா்கின்றது. உலகிலேயே 100 சதவீதம் சுற்றுச்சூழல் மாசடையாமல் கழிவுநீா் ஜீரோ டிகிரி முறையில் சுத்திகரிப்பு திருப்பூரில் மட்டுமே 10 ஆண்டுகளாக நடக்கிறது. நாளொன்றுக்கு திருப்பூரில் 13 கோடி லிட்டா் கழிவுநீா் சுத்திகரிக்கப்படுகிறது.

    அதில் 96 சதவீதம் மறு பயன்பாடு, 4 சதவிகிதம் ஆவியாக்கப்படுகிறது. பசுமையை மேம்படுத்தும் வகையில் திருப்பூா் மாவட்டத்தில் 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றாா்.

    இதைத்தொடா்ந்து ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் பேசியதாவது:-

    ஏ.இ.பி.சி., மற்றும் பி.எஸ்.எல்., இணைந்து டெல்லி, பெங்களூரு, திருப்பூர், மும்பை, குர்ஹாம் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மே 5 முதல் 27-ந் தேதி வரை சுற்றுச்சூழல் மாசடையாமல் ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை பெருக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    புவி மாசுபடாத ஆடைகள் தயாரிப்பில் திருப்பூர் நகரை முதலிடத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நோக்கமே 2025-26ம் ஆண்டுக்குள் திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகள் அனைத்தும் பசுமை ஆடைகளாக தயாரிப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டுள்ளோம்.

    திருப்பூர் மாநகரில் மொத்தமாக சூரிய ஒளி மின் சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி மூலம் 1,650 மெகாவாட் மின் உற்பத்தியை தயார்படுத்தி கொண்டுள்ளோம். இதில், மாவட்ட அளவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 250 மெகாவாட் மின் சக்தியே போதுமானது. மீதமுள்ள 650 மெகாவாட்டை நகர பயன்பாட்டிற்காக அளித்து வருகிறோம்.

    உலக அளவில் உள்ள வர்த்தகர்களுக்கு திருப்பூரின் பசுமை திட்டம் குறித்து முழுமையாக தெரிவதில்லை. அதனை முன்னிறுத்தி பல்வேறு நாடுகளுக்கு திருப்பூரின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் தனித்துவ தன்மையை காட்டுவதற்கே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    இவ்வாறு சுப்ரமணியன் கூறினார்.

    • கடலூர் கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை கட்டப்பட்டதால், அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
    • சில நேரங்களில் மீன்களும் அதிக அளவில் செத்து மிதந்து வரும் சம்பவங்கள் நடக்கிறது

    கட–லூர், மே.5-

    கட–லூர் கம்–மி–யம்–பேட்–டையில் கெடி–லம் ஆற்–றின் குறுக்கே தடுப்–பணை கட்–டப்பட்–டுள்–ளது. இந்த தடுப்–பணை கட்–டப்–பட்–ட–தால், அப்–ப–கு–தியை சுற்–றி–யுள்ள பகு–தி–களில் நிலத்–தடி நீர் மட்டம் உயர்ந்து வரு–கிறது.

    செத்து மிதந்த மீன்–கள்

    ஆனால் சில நேரங்–களில் இந்த ஆற்–றில் கழி–வு–நீர் கலப்–பதால், சுகா–தார சீர்–கேடு ஏற்–பட்டு வரு–கிறது. சில நேரங்–களில் மீன்–களும் அதிக அள–வில் செத்து மிதந்து வரும் சம்–ப–வங்–கள் நடக்–கிறது.

    அதன்–படி நேற்று இந்த தடுப்–ப–ணை–யில் ஏரா–ள–மான மீன்–கள் செத்து மிதந்–தன. துர்–நாற்–ற–மும் வீசி–யது. இதை பார்த்த அப்–ப–குதி மக்–கள் அதிர்ச்சி அடைந்–த–னர். இது பற்றி மாந–க–ராட்சி நிர்–வா–கத்–திற்–கும், மாசு கட்–டுப்–பாட்டு வாரிய அதி–கா–ரி–க–ளுக்–கும் தக–வல் தெரி–விக்–கப்–பட்–டு உள்–ளது. அவர்–கள் இன்று (வெள்–ளிக்–கி–ழமை) நேரில் வந்து ஆய்வு செய்ய இருப்–ப–தாக தெரி–கிறது.

    இது பற்றி மாந–க–ராட்சி மேயர் சுந்–த–ரி–ராஜா, ஆணை–யா–ளர் கிருஷ்–ண–மூர்த்தி ஆகி–யோர் வெளி–யிட்–டுள்ள செய்திக்–கு–றிப்–பில் கூறி–யி–ருப்–ப–தா–வது:-

    எச்–ச–ரிக்கை

    கெடி–லம் ஆற்–றில் கழி–வு–நீர் கலப்–ப–தால் மீன்–கள் செத்–து– மி–தக்–கிறது. இத–னால் கட–லூர் மாந–கர பகு–தி–யில் துர்–நாற்–றம் வீசு–வ–தோடு, நீரும் மாசுப்–பட்டு வரு–கிறது. ஆகவே கழி–வு–நீரை முறை–யாக சுத்–தி–க–ரிப்பு செய்து, அனு–ம–திக்–கப்–பட்ட கழி–வு–நீரை மட்டும் ஆற்–றில் விட வேண்–டும். மேலும் கெடி–லம் ஆற்–றங்–க–ரை–யோரம் இயங்கி வரும் வணிக நிறு–வ–னங்–கள் மற்–றும் குடி–யி–ருப்–பு–களில் இருந்து எவ்–வித கழி–வு– நீ–ரும் நேர–டி–யாக கெடி–லம் ஆற்–றுப்–ப–டு–கையில் விடு–வதை தவிர்க்க வேண்–டும். இதை மீறி எவ–ரேனும் தங்–க–ளது கழி–வு– நீரை ஆற்–றுப்–ப–டு–கையில் விடு–வது கண்–ட–றி–யப்–பட்டால், சம்–பந்–தப்–பட்ட–வர்–கள் மீது சட்ட பூர்வ நட–வ–டிக்கை எடுக்–கப்–படும்.

    இவ்–வாறு அவர்–கள் தெரி–வித்–துள்–ள–னர்.

    • காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
    • காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது.

    சென்னை:

    காவிரியில் கழிவு நீர் அதிகளவில் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரளவை காட்டிலும், இது 484 டி.எம்.சி கூடுதல். நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

    சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது.

    காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
    • திருமுல்லைவாயில் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புழல் ஏரியில் கலப்பதை ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும்.

    திருநின்றவூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    புழல் ஏரி சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இது அம்பத்தூர், திருமுல்லைவாயல், சூரப்பேடு, அம்பத்தூர் பானுநகர், பொத்தூர் உள்ளிட்ட 14 இடங்களின் கரைகளை ஒட்டி அமைந்து இருக்கிறது.

    இந்நிலையில் புழல் ஏரியில் அதிக அளவு கழிவு நீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. தினமும் சுமார் 2 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

    இதில் முக்கியமாக திருமுல்லைவாயல் பகுதியை ஒட்டிய குடியிருப்புகளில் இருந்து அதிக அளவு கழிவுநீர் புழல் ஏரியில் கால்வாய் மற்றும் பைப்புகள் அமைத்துவிடப்படுவதாக கூறப்படுகிறது.

    திருமுல்லைவாயல், விஜயலட்சுமிபுரம், தென்றல் நகர், வெங்கடாசலம் நகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதியில் இருந்து மழைநீர் கால்வாய் மூலம் கழிநீர் ஏரியில் கலந்து வருகிறது. இதனால் இந்த பகுதியை ஒட்டி உள்ள ஏரிக்கரைகள் கழிவு நீராக காணப்படுகிறது.

    இதுகுறித்து புழல் ஏரி மற்றும் அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்க தலைவர் சுந்தரமூர்த்தி கூறியதாவது:-

    திருமுல்லைவாயில் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புழல் ஏரியில் கலப்பதை ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும். திருமுல்லைவாயல் பகுதியில் விஜயலட்சுமிபுரம், வெங்கடபுரம், சரஸ்வதி நகரை ஒட்டிய தென்றல்நகர் கிழக்கு ஆகிய பகுதிகளில் உடனடியாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

    அதே போல் 10-க்கும் மேற்பட்ட நீர்வரத்து கால்வாய்களை பொது மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதை உடனடியாக தடுக்க வேண்டும். இது குறித்து ஆவடி மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    ஆவடி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டமும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முழுவதும் புழல் ஏரிக்கு திருப்பி விடப்படுகிறது. எனவே இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, புழல் ஏரியில் இருந்து தினமும் 416 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்கொண்ட 8 பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • நகராட்சி கமிஷனர் ஜெயப்பிரியா தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • உரிமம் பெற்ற கழிவுநீர் அகற்றும் வாகனம் மட்டுமே மேற்கண்ட பணியில் பயன்படுத்தப்பட வேண்டும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி ஆணையாளா் அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் ஜெயப்பிரியா தலைமையில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி முன்னிலையில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 16 கிராம பஞ்சாயத்துகளான புளியரை, இலத்தூர், சீவநல்லூர், கற்குடி, தெற்குமேடு, கணக்குபிள்ளைவலசை, காசிமேஜர்புரம், குத்துக்கல்வலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், சுமைதீர்த்தபுரம், தேன்பொத்தை, வல்லம், கொடிகுறிச்சி, நெடுவயல், காசிதர்மம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்கான கசடு கழிவு மேலாண்மை திட்டத்தில் இணைப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    உரிமம் பெற்ற கழிவுநீர் அகற்றும் வாகனம் மட்டுமே மேற்கண்ட பணியில் பயன்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட உரிமம் பெற்ற கழிவுநீர் வாகன ஓட்டுநர்களின் தொலைபேசி எண் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தங்களது கிராம பஞ்சாயத்துகளில் மேற்கண்ட உரிமம் பெற்ற கழிவுநீர் அகற்றும் வாகனங்களையே பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    • பூங்கா அருகில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.
    • ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் காத்தான் முதல்நிலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் பட்டணம் காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள கட்டிடங்கள் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

    அதனை தொடர்ந்து சேதுபதி நகர் முதல் தெருவில் ரூ.23.24 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி தொடங்கி உள்ளதை பார்வையிட்டு வரும் மழைக் காலத்திற்கு முன்னதாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார்.சேதுபதி நகர் நீரேற்று நிலையம் சீரமைக்கும் பணி மற்றும் குடிநீர் குழாய் புதிதாக நீடிப்பு செய்யும் பணி ரூ.23.19 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள உள்ளதையொட்டி அதற்கான தேர்வு செய்யப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அனுமதிக்கப்பட்ட இந்த பணியை உரிய காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் பட்டணம் காத்தான் ஊராட்சியில் உள்ள அம்மா பூங்கா பகுதிக்கு சென்று வெளிப்புற பகுதியில் கழிவு நீர் தேங்கியுள்ளதை பார்வையிட்ட கலெக்டர் கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

    ×