என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 220791"
- முதுகுளத்தூர் யூனியனில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும்.
- தலைவர் வலியுறுத்தினார்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் யூனியனில் 46 ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கான நீராதாரம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. பரமக்குடிசார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், யூனியன் தலைவர் சண்முகபிரியா ராஜேஷ் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) வரவேற்றார். இதில் யூனியன் தலைவர் சண்முக பிரியா ராஜேஷ் பேசுகையில், புழுதிக்குளம் எனது கவுன்சிலுக்கு உட்பட்டது. இந்த பகுதிக்கு பாம்பூர் ஜம்ப்பில் இருந்து காவிரி குடிநீர் வர வேண்டும். ஆனால் அது பரமக்குடி தாலுகா ஆகும். அங்கிருந்து குடிநீர் விடுவதில்லை. இப்படித்தான் முதுகுளத்தூர் யூனியன் முழுதும் ஜம்ப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் கூட வழங்க முடியாவிட்டால் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் எப்படி மதிப்பார்கள்?. காவிரி குடிநீர் விரிவாக்கத்தில் அனைத்து கிராமத்திற்கும் குடிநீர் தொட்டிகளை அமைத்து கிராமங்களுக்கு தேவையான குடிநீரை வழங்க வேண்டும் என்றார்.
பயிற்சி கலெக்டர் நாராயண சர்மா, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, ஊராட்சி மன்ற தலைவர்கள் விளங்குளத்தூர் கனகவள்ளிமுத்துவேல், செல்வநாயகபுரம் பால்சாமி, காக்கூர்ஜெயமணிராஜா, குமாரகுறிச்சி செந்தில்குமார், மைக்கேல் பட்டணம் குழந்தை தெரேஸ் சிங்கராயர், யூனியன் மேலாளர் சிவகாமி உள்பட பலர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
- அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 53 ஊராட்சி மன்றத்தலை வர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான தண்ணீர் தேவையை நிறைவேற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதியளவு தண்ணீர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து வழங்க இயலாத சூழ்நிலை தற்பொழுது உள்ளது. அதை மாற்றி அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளும் பொழுது அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 2054-ஆம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தற்பொழுது உள்ள நிலையை சரியாக மதிப்பிட்டு படிவத்தை பூர்த்தி செய்து வருங்கால சந்ததியினருக்கு தடையின்றி குடி தண்ணீர் கிடைத்திட உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், உதவி கலெக்டர் நாராயண சர்மா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- கடலூர் முதுநகர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் ஆய்வு செய்தார்.
- ெரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ெரயில்வே ஊழியர்களின் குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் துறைமுகம் ெரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ெரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் ஆய்வு செய்தார். ெரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ெரயில்வே ஊழியர்களின் குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் அங்கிருந்த பொது மக்களிடம் ெரயில் நிலையத்தில் உள்ள குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் கட்சியினர் மனிஷ் அகர்வாலிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் ெரயில் நிலையங்களில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
- குடிநீர் கிணற்றின் தண்ணீர் மட்டம் நாளுக்குநாள் குறைந்த வண்ணம் உள்ளது.
- தலைவர் கு.பாப்புகண்ணன் முன்னெச்சரிக்கையாக நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
தாராபுரம்:
கோடை வெயிலின் தாக்கத்தால் அமராவதி ஆறு வறண்டு போனது. அதனால் குடிநீர் கிணற்றின் தண்ணீர் மட்டம் நாளுக்குநாள் குறைந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே தினசரி நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி 30 வார்டுகளுக்கு தங்கு தடையின்றி தினசரி வினியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த சில தினங்களாக 15 வார்டுகளுக்கு ஒரு நாளும், அடுத்த 15 வார்டுகளுக்கு மறுநாளும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வரும் நாட்களில் குடிநீர் தேவையை போக்கும் வகையில் அமராவதி ஆற்றில் உள்ள கிணற்றை தூர்வார லாமா?அல்லது புதிய கிணற்றை அமைக்கலாமா? என்ற நோக்கில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் முன்னெச்சரிக்கையாக நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில் "தென்–மேற்கு பருவ மழை வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது. இவைதொடங்கினால் மட்டுமே அமராவதி அணைக்கு நீர்வரத்து வர வாய்ப்புள்ளது. அப்போது தான் நகராட்சி நிர்வாகம் தங்கு தடையின்றி வழக்கம் போல தண்ணீர் வினியோகம் செய்ய முடியும். அதுவரை நகராட்சி நிர்வாகம் வினியோகிக்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நிர்வாகத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்.
- மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சுவதால் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் தாஹிர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம் ஆகிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், அதனை போக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் காத்திருப்பு போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதுகுறித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியினருடன் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் முறைகேடாக மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சுவதால் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
எனவே, அவ்வாறு உறிஞ்ச ப்படும் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை துண்டிக்கப்படும் மற்றும் மின்மோட்டார்கள் அப்புறப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, ஒரு சில இடங்களில் மட்டுமே இணைப்புகள் துண்டிக்கப்ப ட்டது.
எனவே, உடனடியாக முறைகேடாக எடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் வரவேண்டிய 1,10,000 லிட்டர் குடிநீருக்கு பதிலாக தினமும் சராசரியாக 25,000 லிட்டர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
- துணைத் தலைவர் சம்பத்குமார் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
அவினாசி:
அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சின்னேரிபாளையம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கணேசபுரம் ஏ.டி. காலனியில் தலைவர் சரவணன் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. இதில் குப்பையை தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் கொடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கணேசபுரம் முதல் அவிநாசி பேரூராட்சி மடத்துப்பாளையம் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றித்தரவும், சின்னேரிபாளையம் ஊராட்சிக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் வரவேண்டிய 1,10,000 லிட்டர் குடிநீருக்கு பதிலாக தினமும் சராசரியாக 25,000 லிட்டர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
எனவே முழு கொள்ளளவும் வரவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் துணைத் தலைவர் சம்பத்குமார் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் 544 இடங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மா பேட்டை ஒன்றியங்களை சார்ந்த 252 குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ( ஜல் ஜீவன் மிஷன் ) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா பாபநாசத்தில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை உரையாற்றினார். அரசு தலைமை கொறடா கோவி. செழியன் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச் . ஜவாஹிருல்லா, தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சாவூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையாளர் கருணாகரன் வரவேற்றார். தலைமை பொறியாளர் முரளி திட்ட விளக்க உரையாற்றினார்.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என்.நேரு கலந்துகொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்புடன் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஒன்றியங்களில் 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்து விழா பேருரையாற்றினார்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது :-
தனது துறைக்கு இந்த வருடம் 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் 5 கோடியே 50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்படும். தமிழகத்தின் பெரு நகரங்களாக விளங்கும் கோவை ,மதுரை, சேலம் ஆகிய ஊர்களில் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என்றும்,
, இந்த வருடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது துறைக்கு மட்டும் தமிழக அரசு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 544 இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :- ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்துவதில் தமிழகம் 23 வது இடத்தில் இருந்ததாகவும் ,கே என் நேரு இத்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றதும் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது என்றும் அதற்காக விருதும் கிடைத்துள்ளது இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட தி.மு.க துணை செயலாளர்கள் கோவி.அய்யராசு, துரைமுருகன், மாவட்ட கவுன்சிலர்கள் தாம ரைச்செல்வன், பாத்திமா ஜான் ராயல் அலி, ராதிகா கோபிநாத், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அம்மா பேட்டை ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றிய குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்கு மார்,பாபநாசம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் நாசர், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், மற்றும் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் , பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் தஞ்சாவூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளர் எழிலரசன் நன்றி கூறினார்.
பாபநாசத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தினை அமைச்சர் கே. என். நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரசு தலைமை கொறடா கோவி செழியன் , எம்.எல்.ஏக்கள் ஜவாஹிருல்லா, சந்திரசேகரன், நீலமேகம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் ஆகியோர் உள்ளனர்.
- சிறு மின்விசை இரைப்பான் பழுதடைந்ததை சரி செய்ய கோரி அந்தப் பகுதி மக்கள் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம்கணேசனிடம் கோரிக்கை வைத்தனர்.
- மின் மோட்டாரை உடனே பழுது நீக்கம் செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினார்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி 11-வது வார்டில் உள்ள சிறு மின்விசை இரைப்பான் பழுதடைந்ததை சரி செய்ய கோரி அந்தப் பகுதி மக்கள் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம்கணேசனிடம் கோரிக்கை வைத்தனர். உடனடியாக பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் மின்மோட்டாரை பழுது பார்க்கும் ஊழியர்களை அழைத்துச் சென்று மின் மோட்டாரை உடனே பழுது நீக்கம் செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினார். அதனால் அந்தப் பகுதி மக்கள் பேரூராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
அப்போது அவருடன் தி.மு.க. நகர செயலாளர் பூக்கடைகணேசன், அம்சவள்ளிராஜேந்திரன், டி.கே.எஸ் செந்தில்முருகன், அரங்கராஜன், வார்டு செயலாளர் ரமேஷ் ஒன்றிய பிரதிநிதி பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சுத்திகரிக்கப்பட்டு இன்று வீடுகளுக்கு விநியோகம்
- 6 மோட்டார்கள் மூலம் தண்ணீரை கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை உள்ளது. இங்கிருந்து தான் வீடுகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோடை காலமான தற்போது முக்கடல் அணையில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வந்தது.
இதனை கருத்தில் கொண்டு, மக்களின் குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை அல்லது பெருஞ்சாணி அணை களில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வேண்டுகோள் விடுத்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பரிந்துரையின் பேரில் நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக கோதையாறு பாசன அணைகளில் இருந்து மே மாதம் 31-ந் தேதி வரை தினமும் 50 கன அடி தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனையடுத்து பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று இரவு 10 மணிக்கு முக்கடல் அணையை வந்தடைந்தது.
தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள், 6 மோட்டார்கள் மூலம் தண்ணீரை கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், இன்று காலை ஷிப்டு முறையில் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
- குடிநீரின்றி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
- தற்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத அளவில் குடிநீர் வினியோகத்தை நிறுத்திவிட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல மருதூர் ஊராட்சி மேலசேத்தி கிராமத்தில் உள்ள 27 வீடுகளுக்கு கடந்த 23 ஆண்டுகளாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பொது குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது. இந்த குடிநீரானது நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் வண்டுவாஞ்சேரி ஊராட்சி நால்ரோடு பகுதியில் உள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் அமைப்பிலிருந்து விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம், வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மேலமருதூர் ஊராட்சி நிர்வாகம் மூலமாக குடிநீர் பைப்புகள் வீடுகள் தோறும் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகமும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதனால் மேல சேத்தி கிராமத்தில் வசிக்கும் 27 குடியிருப்பு வாசிகள் குடிநீரின்றி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் மேலச்சேத்தி குடியிருப்பு பகுதியில் அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் இணைப்புகளும்
துண்டிக்கப்பட்டு விட்டதால், தற்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத அளவில் குடிநீர் வினியோகத்தை நிறுத்திவிட்டனர். இதனால் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறோம். உடனடியாக குடிநீர் விநியோகத்தை சீராக வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- அரசு பஸ்சையும் சிறை பிடித்ததால் பரபரப்பு
- உடனடியாக குடிநீர் வழங்கலாம் என வாக்குறுதி அளித்தனர்.
கன்னியாகுமரி :
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் களியக்காவிளை- மெதுகும்மல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி களியக்காவிளை சந்தை பகுதியில் அமைந்து உள்ளது. இங்கிருந்து ஆர்.சி. தெரு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஆர்.சி. தெரு பகுதியில் குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து பல முறை களியக்காவிளை பேரூரா ட்சியில் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் இன்று ஆர்.சி. தெரு சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் மற்றும் களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.மேலும் உடனடியாக குடிநீர் வழங்கலாம் என வாக்குறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கை விடப்பட்டது. இந்தப் போரட்டம் காரண மாக அந்தப் பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டம் களியக்கா விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- 4 ரத வீதிகளை அழகுப்படுத்தும் விதமாக ரூ. 14.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
மின் விளக்குகள்
டவுன் பாட்டப்பத்து ஜும்மா பள்ளிவாசல் தலைவர் நெல்லை அபுபக்கர் அளித்த மனுவில், டவுன் பாட்டபத்து ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான மைய வாடி பகுதியில் புதிய சாலை மற்றும் சுற்றுச்சுவர் அழைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மின்விளக்குகள் பொருத்தப்படாததால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு புதிய மின்கம்பங்கள் அமைத்து மின் விளக்குகள் எரிய விட வேண்டும் என்று கூறியிருந்தார்.
வி.எம்.சத்திரம் சீனி வாசன் நகர் ஏ காலனியை சேர்ந்த கந்தசாமி என்பவர் அளித்த மனுவில், சீனிவாசகம் நகர் ஏ காலனி 4-வது தெருவில் குறிப்பிட்ட சில வீடுகளில் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதால் எங்களை போன்றவருக்கு குடிநீர் கிடைக்கவில்லை.
எனவே அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தனர்.
மாவீரன் சுந்தரலிங் கனார் மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், இந்து மக்கள் கட்சி உடையார், சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ள 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை அழகுப்படுத்தும் விதமாக கடந்த 2019-ம் ஆண்டு ரூ. 14.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை யில் 4 ரத வீதிகளிலும் ரூ.65 லட்சம் வரையிலும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், அந்த தொகை ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பணிகள் நடைபெறாத பட்சத்தில் இவ்வளவு தொகை எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த கூட்டத்தில் செயற்பொறியாளர் வாசுதேவன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர்கள் லெனின், வெங்கட்ராமன் ஜஹாங்கீர் பாஷா, காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு
தொடர்ந்து மேயர் சரவணன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், நெல்லை மாநகரில் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு தண்ணீர் தரும் உறை கிணறுகளை மணல் மூடைகள் அடுக்கி தண்ணீர் சேமித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்