search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு"

    • கரூர் அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதி கோரி மனு
    • கூடுதல் கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர் நாள் கூட்டத்தில் கரூர் மாவட்டம், ரெங்கநாதன் பேட்டை சட்டப்பஞ்சாயத்து இயக்க உறுப்பினர் ஞானசேகர் வழங்கிய மனுவில், 'கரூர் மாவட்டம், நெரூர் தென்பாகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இருபாலரும் பயின்று வருகின்றனர். பள்ளி மாணவர்கள் சிறப்பாக பயின்று கடந்த கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். தற்போது இப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் தேவைப்படுகிறது. எனவே, வகுப்பறை கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளியின் நுழைவு வாயில் பாதையில் மழைக்காலங்க ளில் தண்ணீர் தேங்குகிறது. எனவே, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

    • 350 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
    • புதுக்கோட்டை மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவிடம் பொதுமக்கள் அளித்த மனு மீது நடவடிக்கை

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 350 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில்  குப்பை வரிைய நீக்க வலியுறுத்தி மேயரிடம் கவுன்சிலர்கள் மனு அளித்தனர்
    • மாநகராட்சி சம்பந்தமான வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக 23 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    ஈரோடு,

    ஈரோடு மாநகராட்சி கூட்டரங்கில் இன்று மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. மேயர் நாகரத்தினம் சுப்பிர மணி தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் ஆகி யோர் முன்னிலை வைத்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான பொருளை விளக்கி கூறினார். அதைத் தொடர்ந்து மாநகராட்சி சம்பந்தமான வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக 23 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்ச னைகள் குறித்து விரிவாக பேசினர். அப்போது 40-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் குமார் பேசும்போது, 40 -வது வார்டில் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த பாரதியார் நூலகம் உள்ளது. நூற்றாண்டு கண்ட நூலகம். இதில் தான் மகாகவி பாரதியார் 1921 -ம் ஆண்டு மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் தனது இறுதி உரை ஆற்றினார். இந்த சிறப்புமிக்க நூல கத்தில் அருங்காட்சியகமும் உள்ளது. இந்த சிறப்புமிக்க நூலகம் நீண்ட நாட்களாக சிதிலடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    இதை நிர்வாகிப்பது பராமரிப்பது பொது பணி துறை. இது குறித்து அவர்களிடம் பல முறை முறையிட்டும் கடிதம் கொடுத்தும் பயன் இல்லை. இந்த நூலகத்தை மாநகரா ட்சியே நிர்வாகிக்க வேண்டும் என 2-வது முறையாக கோரிக்கை வைக்கிறேன் என்றார். தொடர்ந்து காங்கிரஸ் கவுன்சிலர் சபுராமா சாதிக் கூறும்போது, எனது வார்டில் உள்ள குந்தவை வீதியில் உள்ள ரோடு மிகவும் குண்டு குழியுமாக மோசமாக உள்ளது. அந்த ரோட்டை உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து மாநகராட்சியில் உள்ள அனைத்து கவுன்சிலர்களும் ஒன்றிணைந்து மாநகராட்சி யில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரிகளை நீக்க வலியுறுத்தி மேயர் நாக ரத்தினத்திடம் மனுக்கள் கொடுத்தனர். 

    • நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
    • தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வா ய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

    எனவே தஞ்சை தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ்கார்னர், அருளானந்தநகர், பர்மாகா லனி, நிர்மலாநகர், யாக ப்பாநகர், அருளான ந்தம்மா ள்நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காந்திஜி ரோடு, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகு மான்நகர், ரெட்டி ப்பாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமா லைபுரம், வித்யாநகர், மேலவெளி ஊராட்சி, தமிழ்ப்ப ல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதாக்கோ ட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கடநகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரநகர், நாஞ்சி க்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10 கிலோமீட்டர் தூரம் கால்நடைகளை அழைத்து வந்து மருத்துவ வசதிகளை பெற வேண்டி உள்ளது.
    • காசிதர்மத்தில் அதிகமான ஆடு, மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

    தென்காசி:

    கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமையிலான தி.மு.க.வினர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர் அதில் கூறியிருப்பதாவது:-

    செங்கோட்டை ஒன்றியம் புதூர் பேரூராட்சி, கடைய நல்லூர் ஊராட்சி ஒன்றியம் காசிதர்மத்தில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். புதூர் பேரூராட்சி பகுதியில் உள்ளவர்கள் தங்கள் கால்நடைகளை செங்கோட்டைக்கு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கால்நடைகளை அழைத்து வந்து மருத்துவ வசதிகளை பெற வேண்டி உள்ளது. மேலும் கேசவபுரம் பகுதியில் அதிகமான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே கேசவபுரத்தில் கால்நடை மருத்துவமனை அமைப்பது மிகவும் அவசியமாகிறது. அதேபோல காசிதர்மத்தில் அதிகமான ஆடு, மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

    இந்த பகுதியில் வளர்க்கப்படுகிற ஆடு, மாடுகளுக்கு நோய் வந்தால் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடையநல்லூருக்கு செல்ல வேண்டி இருக்கிறது. அல்லது அச்சம் புதூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே புதூர் பேரூராட்சி கேசவபுரத்திலும், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் காசிதர்மத்திலும், கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவினை பெற்றுக் கொண்ட கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியின் போது செங்கோட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரும், (செ)புதூர் பேரூராட்சி தலைவருமான ரவிசங்கர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமி துரை, முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் காசி தர்மம்துரை, தொழிலதிபர் மாரித்துரை, ராமானுஜம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், கொய்யா தோப்பு பகுதி மக்கள் முகமது நாசர் தலைமையில் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார் ஆகியோர் போராட்டக்கா ரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டக்காரர்கள் பேரூராட்சியில் இருந்த அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார்.

    இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள்களைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.
    • மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட ம், தரங்கம்பாடி தாலுகாவில் பெரிய மடப்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மயிலாடுதுறை மற்றும் திருக்கடையூர், பொறையார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பேருந்து வசதி இல்லாததால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் செம்பனார்கோவில், ஆக்கூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இதனால், இக்கிராம த்துக்கு மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி காவேரி டெல்டா பாசனதாரர் விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் குரு கோபிகணேசன் தலை மையில் பெரியமடப்புரம், மாத்தூர், முக்கரும்பூர் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து கலெக்டர் மகாபாரதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    • கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார்.
    • விண்ணபித்து பல மாதங்களாகியும் சான்றிதழ் கிடைக்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் கடமடை கிராமத்தைச் சேர்ந்தவர் ஒருவர் மனு கொடுக்க வந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கடமடை கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி சாலம்மாள். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளது.

    இந்நிலையில் சாலம்மாளின் கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார்.

    இந்நிலையில் சாலம்மாளுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெற ஆதரவற்ற விதவை சான்றிழ் தேவை என்று விண்ணபித்தார். விண்ணபித்து பல மாதங்களாகியும் சான்றிதழ் கிடைக்கவில்லை. எனவே ஆதரவற்ற விதவை சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இந்நாள் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளுக்கடைமேடு கிராம மக்கள் 6 தலைமுறையாக வசித்து வருகின்றனர். கடந்த ஐந்தாண்டு காலமாக வீட்டுமனைகள் இல்லை எனக்கோரி கடந்த 2020-ம் ஆண்டும் 2022-ம் ஆண்டும் பொன்னேரி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதை தொடர்ந்து பொன்னேரி கோட்டாட்சியர் குழு அமைத்து பட்டா தருவதற்கான முகாந்திரம் உள்ளதால் பட்டாதாரர்களுக்கான பயனாளிகள் பட்டியல் மற்றும் வரைபடம் தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ளார்.

    ஆனால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இந்நாள் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் இனிவரும் மழை காலங்களில் தங்குவதற்கான இட வசதி இல்லாத காரணத்தினால் கடந்த 10-7-2023 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இலவச பட்டாக்கள் வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதை உடனடியாக செயல்படுத்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மேலும் தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் ஏற்கனவே தயார் செய்த பயனாளிகள் பட்டியல் மற்றும் வரைபடத்தை கொண்டு உடனடியாக பயனாளிகளை தற்காலிக குடிசைகள் அமைக்க அனுமதி வழங்க உத்தரவிடும் படியும் வலியுறுத்தி உள்ளனர்.

    • தொழில் மேற்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
    • 2016 -ம் ஆண்டுக்கு பிறகு இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்து வரும் நிலையில் சிகரம் உன்னால் முடியும் தோழா மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகள் யாரிடமும் உதவி கேட்காமல் வங்கி கடன் மூலமாக தொழில் மேற்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் வங்கி கடன் கிடைக்காத காரணத்தினால் ஏமாற்றத்துடன் இருந்து வருகிேறாம். கடந்த 2014 - 15-ம் ஆண்டு அன்றைய கலெக்டர் மூலமாக கடன் இல்லாத தொகையாக சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் 2016 -ம் ஆண்டுக்கு பிறகு இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் பல மாற்றத்தினாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதோடு வாழ்வாதாரம் இல்லாமல் இருந்து வருகின்றோம். ஆகையால் வங்கிகளில் சிறப்பு நிதி திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து மாற்றத்தினைகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல பஸ் வசதியின்றி தவித்து வருகின்றனர்.
    • எண்27 பஸ் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் சுண்டமேடு பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் சுண்டமேடு பகுதியில் 450 குடும்பத்தினர்வசித்து வருகின்றனர். இப்பகுதி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல பஸ் வசதியின்றி தவித்து வருகின்றனர். எனவே சுண்டமேடு பகுதியில் இருந்து இடுவம்பாளையம் செல்ல காலை 8-30மணிக்கும் , மாலை 5மணிக்கும் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஏற்கனவே எண்27 பஸ் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

    • சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, முட்டாஞ்செட்டி ஊராட்சியில் அனைவருக்கும் காவிரிக் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • கடந்த 5-ந் தேதி முட்டாஞ்செட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற ஏற்பா டுகள் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், முட்டாஞ்செட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் கமலபிரியா, நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

    சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, முட்டாஞ்செட்டி ஊராட் சியில் அனைவருக்கும் காவிரிக் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த 5-ந் தேதி முட்டாஞ்செட்டி ஊராட்சி யில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற ஏற்பா டுகள் செய்யப்பட்டது. எனினும், வார்டு உறுப்பி னர்கள் ஒத்துழைப்பு வழங் காததால் கூட்டம் நடத்தப் படவில்லை.

    பின்னர் 7-ந் தேதி கிராம பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தடைவிதித்து உத்தரவிட்டார். எனவே கூட்டம் நடத்தப்படவில்லை. இச்சூழலில் ஊராட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்த, அனுமதியளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது

    ×