search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்தரங்கம்"

    • ராமநாதபுரத்தில் நடந்த மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குவது குறித்த கருத்தரங்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்றார்.
    • மகளிர் சுய உதவி குழு கடன் மேளா நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்த லுக்கு இணங்க கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குவது தொடர்பான கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் வளாக மக்கள் குறைதீர் கூட்டரங்கில் நடத்தியது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு கலந்து கொண்டார்.

    அவர் பேசியதாவது:-

    மகளிர் சுய உதவி குழு கடன்கள் அதிகம் வழங்கப்படுவதன் மூலம் மாவட்டத்தில் பண சுழற்சி அதிகம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 100-க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்கள் உருவாக்கப் படவும், இந்த நிதியாண்டில் ரூ.300 கோடிக்கும் மேலாக மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கவும் உறுதி பூண்டு துறை அலுவலர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் செயல்பட வேண்டும்.

    மேலும் மே 15 முதல் ஜூன் 30 வரை மாவட்டத்தில் உள்ள 131 வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மகளிர் சுய உதவி குழு கடன் மேளா நடைபெற உள்ளது. இதில் சங்கத்தின் விவகார எல்லையில் உள்ள அனைத்து மகளிரும் உறுப்பினராகி, கடன் பெற்று பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள், கூட்டுறவுத்துறை மற்றும் மத்திய வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர். சிறந்து விளங்கிய கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

    • வங்கிகடன், அரசு துறை சான்றிதழ்கள் பெறுவது எப்படி.
    • அடிப்படை பிரச்சினைகளுக்கு புகார் அளிப்பது எப்படி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த செம்போடையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் இலவச பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில பொதுச்செயலாளர் அருள் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

    இதில் நீதிமன்ற வழக்குகள் மற்றும் நடைமுறைகளை எதிர்கொள்ளுவது எப்படி? தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் இலவசமாகவும், விரைவாகவும் பட்டா, குடும்ப அட்டை, மின் இணைப்பு, வங்கிகடன், அரசு துறை சான்றிதழ்கள் பெறுவது எப்படி? அடிப்படை பிரச்சினை களுக்கு புகார் அளிப்பது எப்படி? சமூக வலைதளங்களை பயன்படுத்தி புகார் அளிப்பது எப்படி? போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கங்காதுரை, நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், தலைஞாயிறு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், கீழையூர் ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன், வேதாரண்யம் பேரூராட்சி பொறுப்பாளர் நந்தகுமார் மற்றும் அகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆலோசனை
    • பல்வேறு தலைப்புகளில் அரசு அதிகாரிகள் பேச்சு

    திருச்சி,

    பௌர்ணமி அறக்கட்டளை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல், தொழில் முனைவோர் கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது. அறக்கட்டளையின் ஆயுட்கால அறங்காவலரும், பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற முதன்மை பொறியாளரும், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வல்லுனர் குழு உறுப்பினருமான தங்க பிரகாசம் தலைமை தாங்கினார். தலைவர் ஜெகதீஷ் குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.அறக்கட்டளையின் நிர்வாகிகள் ராஜூ, செந்தில்குமார், காளீஸ்வரன் முன்னிலை வகித்தனர். அசோகன் வரவேற்றார். இந்த விழாவில் 'அம்பேத்கரை படித்தேன், ஐ.ஏ.எஸ். ஆனேன்' என்ற தலைப்பில் ஆந்திர மாநிலம் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் எஸ்.சரவணன் ஐ.ஏ.எஸ். 'நம்மாலும் முடியும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.அவர் பேசும்போது கூறியதாவது:-மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை. பாட மதிப்பெண் என்பது ஒரு அளவீடு தான். அதனையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எந்த ஒரு தகுதியும் பிறவியில் இருந்து வருவது அல்ல. தகுதியை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் மாணவர்கள் பள்ளி கல்லூரியில் படிக்கும்போதே தங்களுக்கான ஒரு எதிர்பார்ப்பை, ஒரு இலக்கை ஏற்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.நமக்கு அடிப்படை என்பது கல்வி தான். 90 சதவீத அரசு பணிகளுக்கு பட்டப் படிப்பு அவசியமாக இருக்கிறது. நாம் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற மனநிலையில் இருந்து முதலில் வெளியே வர வேண்டும். ஐஏஎஸ் படிப்பதற்கு தமிழக அரசு மாதம் ரூ. 7500 உதவித்தொகை வழங்குகிறது. மேலும் பல சலுகைகள் இருக்கிறது. கடினமாக உழைத்தால் வெற்றி பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த விழாவில் சென்னை ஜி.எஸ்.டி. கூடுதல் கமிஷனர் மோகன் கோபு, இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் துணைத் தலைவர் ஜோதி கிருஷ்ணன், சேலம் மத்திய வருவாய் துறை துணை ஆணையர் கண்ணன், வழக்கறிஞர் திருமுருகன் ஆகியோரும் பேசினார்கள் நிகழ்ச்சியில் பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அம்பேத்கர் பற்றிய பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பு கருத்தரங்கம் நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தென் மாவட்ட அளவில் தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பு கருத்தரங்கம் ஐ.எஸ்.எம். நிறுவனம் சார்பில் மதுரையில் நடந்தது. மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங் களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மனோகரிதாஸ் தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு தனித்து வாழும் பெண்கள் நலவாரிய உறுப்பினர் கிளாரா கலந்து கொண்டு பேசுகையில், தனித்து வாழும் பெண்களுக்கு வங்கிக் கடனுதவி, கல்விக் கேற்ற வேலை வாய்ப்பு ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    சிறப்பு விருந்தினர்களாக ஜீவானந்தம், செல்வகுமார், பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தனித்து வாழும் பெண்க ளுக்கான நலவாரியத்தை தமிழக அரசு விரைவில் நடைமுறைபடுத்த வேண்டும் என கருத்த ரங்கில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    முன்னதாக தனித்து வாழும் பெண்கள் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான பிரகடனத்தை கிளாரா வெளியிட மனோகரிதாஸ் பெற்று கொண்டார்.மாக்ஸின் வரவேற்றார். கஸ்தூரி நன்றி கூறினார்.

    • நீர் நிர்வாகம் மற்றும் ஊடுபயிர் சாகுபடி குறித்த தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தார்.
    • தென்னையில் உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் நாற்றங்கால் மேலாண்மை குறித்து விளக்கி கூறினார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்கு ட்பட்ட வேப்பங்குளத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் திருச்சி துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில் தென்னை யில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி கருத்தரங்கம் நடை பெற்றது.

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் கமல சுந்தரி தென்னையில் இளநீர் பாயாசம் ,தேங்காய் இட்லி பொடி, தேங்காய் எண்ணெய் ,தேங்காய் பர்பி ,தேங்காய் சீப்ஸ் தேங்காய் பவுடர் மற்றும் தேங்காய் பால் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை செய்து செயல் விளக்கம் விளக்கம் அளித்தார்.வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாபு தெ ன்னையில் ஒருங்கிணைந்த உர மேம்பாடு, நீர் நிர்வாகம் மற்றும் ஊடுபயிர் சாகுபடி தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தார்.

    அருண்குமார் இணைப் பேராசிரியர் (தோட்ட க்கலை) தென்னையில் உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் நாற்றங்கால் மேலாண்மை பற்றி கூறினார்.

    இதில் மதுக்கூர் சுற்று வட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டாரங்களில் என பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த விவசா யிகள் தங்களது கருத்து க்களை கேட்டறிந்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டை பாசன மேலாண்மை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் செல்வம் செய்தார். முடிவில் உதவி பேராசிரியர் சுகன்யா தேவி நன்றி கூறினார்.

    • 63 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு 40 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
    • மாற்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டையும் சிறப்புற மேற்கோள்காட்டினார்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்வி நிறுவனங்கள், இணைந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) காரைக்கால் நிதி பங்களிப்புடன் கூடிய சர்வதேச அளவிலான கருத்தரங்கம் எதிர்கால சக்தி அமைப்பு மற்றும் சேமிப்பு குறித்த தலைப்பில் நடை பெற்றது.

    கருத்தரங்கை ஓ என் ஜி சி நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் ராஜசேகரன், நேதாஜி கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலா ஆனந்த், இயக்குநர் விஜயசுந்தரம் , ஆலோசகர் ஜான் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுருநாதன்,ஆராய்ச்சி துறைத்தலைவர் கணேசன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் முனைவர் ரகுநாதன் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் சுமார் 63 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு 40 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

    சக்தி அமைப்பு மற்றும் சேமிப்பு குறித்த சில முக்கிய பதிவுகளையும் எதிர் காலத்தின் சக்தி அமைப்பின் வரைகோலையும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓ எம் ஜி சின் பிரதி பொது முகாமை யாளர் ராஜசேகரன் எடுத்துரைத்தார்.

    மேலும், மாற்று புதுப்பிக்கத்தக்க எரி சக்தியின் பயன்பாட்டையும் சிறப்புற மேற்கோள் காட்டினார்.

    மேலும் கல்வி குழுமங்களின் தாளாளர் முனைவர் வெங்கட்ராஜிலு செயலர் சுந்தர்ராஜ் ஆகியோரின் உத்தரபடி விழாவின் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கணேசன், அனைத்து துறை சார்ந்த துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கல்லூரி செயலாளர் ராஜன் கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
    • கல்லூரி அகதர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் மகேஷ் வாழ்த்தி பேசினர்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் கணிதத்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி பொறுப்பு முதல்வரும், இயற்பியல் துறை தலைவருமான ஜெயந்தி தலைமை தாங்கினார். கணித துறை தலைவர் ஜெயலட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலாளர் ராஜன் கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    முன்னாள் பேராசிரியர் ராமச்சந்திரன், கல்லூரி அகதர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் மகேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    கேரள பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் அனில்குமார், தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி கணிதத்துறை தலைவர் ஸ்டீபன்ஜான் ஆகியோர் கருத்து ரையாற்றினர். ஒருங்கி ணைப்பாளர் பேராசிரியர் சிவபாலன் நன்றி கூறினார். கணிதத்துறை உதவி பேராசிரியர் திருநாவுக்கரசு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். கருத்தரங்கில் கணிதத்துறை மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பிற துறை ஆசிரியர்களும் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கவுரி, ஜெயபுவனேஸ்வரி, ஹெரின்வைஸ்பெல், பிரியவதனா, அணு, செல்வகுமார், மகேஷ்வரன் மற்றும் பிரபாவதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • செய்யது ஹமீதா கல்லூரியில் கற்றல் முறை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • பேராசிரியர் முகமது ஆசாத் பெயிக் பேராசிரியர் நஜ்முதீன் உள்பட பலர் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரபிக் துறை சார்பாக அரபு மொழியின் தனித்தன்மை மற்றும் கற்றல் முறை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அரபிக் துறை பேராசிரியர் செய்யது முஹம்மது இலியாஸ் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே அரபி கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அரபிக் துறை தலைவர் முகைதீன் அப்துல் காதீர்,பேராசிரியர் முகமது ஆசாத் பெயிக் பேராசிரியர் நஜ்முதீன் உள்பட பலர் செய்திருந்தனர்.

    • தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கருத்தரங்கம் நடந்தது.
    • பெண்கள் தலைமையிலான புராதான பொதுவுடைமை சமுதாயம் தான் முதலில் தோன்றியது.

    தஞ்சாவூர்:

    இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.

    கருத்தரங்கத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பத்மாவதி சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தஞ்சை மாநகர செயலாளர் எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி பேசும்போது,

    மனித குலத்தில் முதன் முதலாக சமூகம் உருவானபோது பெண்கள் தலைமையிலான புராதான பொதுவுடைமை சமுதாயம் தான் முதலில் தோன்றியது.

    மனித குல வரலாற்றில் மனித கூட்டத்தை தலைமை யேற்று வழி நடத்தியவர்கள் பெண்கள் தான்.

    இத்தகைய பொதுவுடமை அரசை வழி நடத்தியவர்கள் பெண்கள் தான் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் பெண்கள் தன்னிறைவு பெறுவது என்பது கல்வி பயில்வதனால் மட்டுமே முடியும்.

    ஆகவே பெண்கள் கல்வி மிக, மிக முக்கியமானது. ஒவ்வொரு பெண் குழந்தையும் கல்வியறிவு பெறுவதற்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டும் . உயர் படிப்பு வரை படிப்பதற்கு உற்சாகப்படுத்த வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகர செயலாளர் ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர் சிவகாசி , மல்லிகா, மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ஜெனிதா, பட்டுக்கோட்டை செயலாளர்கள் ஜானகி, சகுந்தலா, சேதுபாவாசத்திரம் செயலாளர் கனகம், ஒரத்தநாடு செயலாளர் எலிசபெத், திருவோணம் செயலாளர் தவமணி, பேராவூரணி செயலாளர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட தலைவர் தனசீலி அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

    • முதியோர் பாதுகாப்பு, சாலை விதிகளை மதித்து நடத்தல் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து பேசினார்.
    • முன்னதாக கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்றார்.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் புதுச்சேரி ஓய்வு பெற்ற காவல்துறை கண்கா ணிப்பாளர் கொண்டா வெங்கடேஸ்வரராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது வரதட்ச ணை ஒழிப்பு, பாலியல் வன்கொடுமை இளம்பெ ண்கள் பலாத்காரம்,முதி யோர் பாதுகாப்பு, சாலை விதிகளை மதித்து நடத்தல் போன்ற பல்வேறு கருத்து க்கள் குறித்து விரிவாக பேசினார். முன்னதாக கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர், செயலர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமையில் கருத்தரங்க மாநாடு நடந்தது.
    • ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தனியாக விவாத அரங்குகள் அமைக்கப்பட்ட இருந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் அமைந்துள்ள மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக் கல்லூரியில் கொரோனா காலத்திற்குப் பிந்தைய உலக நிலவரங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச பல்துறை கருத்தரங்க மாநாடு கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமையில் நடந்தது.

    பாவூர்சத்திரம் செந்தூர் ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் கணேசன் வரவேற்றார்.

    பேராசிரியர் சகிலா பானு வாழ்த்தி பேசினார்.கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேசுகையில், கொரோனா காலத்திற்கு பிந்தைய உலக நடப்புகள் என்ற தலைப்பில் நடக்கும் இந்த மாநாட்டில் பேசப்படுகின்ற கருத்துக்களை மாணவ-மாணவிகள் மனதில் பதிய வைத்து தங்களுடைய கல்வி மேம்பாட்டிற்காகவும் வாழ்க்கையின் முன்னேற்றத் திற்காகவும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    தொடர்ந்து மலேசியா நாட்டின் மஹ்சா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்டனி சாம்ராட் பேசுகையில், கொரோனா வைரஸ் எவ்வாறு உருமாற்றம் பெறுகிறது, நமது உடலின் உள்ளுறுப்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது பற்றி எடுத்துக் கூறி, கொரோனா பாதித்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை தங்களுடைய உடல் நிலையை மருத்துவரின் ஆலோசனையின்படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

    பின்னர் மலேசியா மஹ்சா பல்கலைக்கழகம் மற்றும் சங்கரன்கோவில் மனோ கல்லூரி இடையே பேராசிரியர்கள் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    தென்கொரியா பல்கலைக்கழகப் பேராசிரி யர் டாக்டர் பவட், நியூயார்க் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் பிரவீன் சூசை ஆண்டனி ஆகியோர் ஆன்லைன் வழியாகவும் கலந்து கொண்டு பங்கேற் பாளர்களின் வினாக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

    தொடர்ந்து ஒவ்வொரு துறைகளுக்கும் தனித் தனியாக விவாத அரங்கு கள் அமைக்கப்பட்டு அந்த துறைகள் பற்றி எடுத்துரைக் கப்பட்டது.

    இதில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் நவநீத கிருஷ்ணன், பேராசி ரியர்கள் முருகையா, சந்தானகுமார், பேராசிரியர்கள்நெல்லை வக்கீல் முருகேசன், வித்யா, சாரநாதன் பாலமுருகன், லெனின் செல்வநாயகம், பால் மகேஷ், ஆனந்தகுமார், மகாலட்சுமி, நாகம்பட்டி ராம பாண்டி, உதயசங்கர், புஷ்பராணி, அருள் மனோகரி, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை மாநாட்டின் ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் செய்திருந்தார்.

    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கினார்.
    • கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை வேதியியல் துறை சார்பில் "சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். முதுநிலை வேதியியல் துறை தலைவர் கோகிலா வரவேற்றார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை இணை பேராசிரியர் எஸ்.சபியா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு "செம்பை உயிரியல் வாழ்க்கையோடு இணைத்தல்" என்ற தலைப்பில் பேசினார். திருவனந்தபுரம் மார் இவானியோஸ் கல்லூரியின் பேராசிரியர் ஆர்.செல்வின் ஜோசிபல் "விசிபில் லைட் ட்ரைவன் டைட்டானியா பேஸ்டு நானோ காம்போசைட் சிஸ்டம் பார் என்விரான்மென்ட்ஸ் அப்ளிகேஷன்ஸ்" என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர் கோகிலா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராகவும், பேராசிரியர்கள் ஆல்வின் ஜெயதுரை, மூகாம்பிகை ஆகியோர் கருத்தரங்க அமைப்பாளராகவும் செயல்பட்டனர்.

    கருத்தரங்கில் ஆதித்தனார் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் அந்தோணி முத்துபிரபு, ஆய்வக உதவியாளர் ஐகோர்ட் மகாராணி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    ×