search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை"

    • 3 தனிப்படை போலீசார் கொலை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
    • கொலை செய்யப்பட்ட தாய், மகள் இருவரும் வசித்து வந்த பகுதியில் வீடுகள் குறைவாகவே உள்ளது. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டே கொலையாளிகள் இருவரை யும் கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    வெள்ளிச்சந்தை அருகே முட்டம் தூய குழந்தை இயேசு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவரது மனைவி பவுலின் மேரி (வயது 48).

    இவர்களுக்கு ஆலன் (25) ஆரோன் (19) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஆன்றோ சகாயராஜ் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருடன் இவரது மூத்த மகன் ஆலனும் வேலை செய்து வந்தார். ஆரோன் சென்னையில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

    வீட்டில் பவுலின் மேரி மற்றும் அவரது தாயார் திரேசம்மாள் (90) ஆகிய இருவரும் இருந்தனர். நேற்று காலை வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த உறவி னர்கள் வெள்ளிச்சந்தை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பவுலின் மேரி, திரேசம்மாள் இருவரும் வீட்டின் முன் அறையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

    கொலை செய்யப்பட்ட வர்கள் கழுத்தில் கிடந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிர சாத்தும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இது குறித்து வெள்ளி ச்சந்தை போலீசார் வழ க்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு சில முக்கிய தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    கொலையாளிகள் மின் மீட்டரை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் வீட்டில் இருந்த அயன்பாக்ஸ் ஒன்றிலும் ரத்தக்கறை படிந்து இருந்தது. எனவே கொலையாளிகள் அயன்பாக்ஸ் மூலமாக தாய், மகள் இருவரையும் தாக்கி கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

    தாய், மகள் இருவரும் ஒரே அறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததால் இந்த கொலை யில் ஒன்றுக்கு மேற்பட்ட வர்கள் சேர்ந்துதான் இந்த கொலையை அரங்கேற்றி இருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ரத்தக்கறை படிந்திருந்த அயன்பாக்ஸ், இரண்டு மப்ளரையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு மாலையில் தான் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இந்த கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

    கொலையாளிகள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களின் தொடர்பில்லாமல் இந்த கொலையை அரங்கேற்றி இருக்க முடியாது. எனவே அதே பகுதியைச் சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உறவினர்கள் சிலரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி, திரேசம்மாள் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி யில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டுள்ளனர்.

    இதற்கிடையில் வெளி நாட்டில் உள்ள பவுலின் மேரியின் கணவர், மகன் இருவரும் இன்று மாலை ஊருக்கு வருவதாக அவரது உறவினர்கள் தெரி வித்தனர். சென்னையில் உள்ள பவுலின் மேரியின் மகன் ஆரோன் இன்று ஊருக்கு வந்தார். தாயாரின் உடலை பார்த்து கதறி அழுத அவரை உறவினர்கள் சமாதானம் செய்தனர். தாய், மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொலை செய்யப்பட்ட தாய், மகள் இருவரும் வசித்து வந்த பகுதியில் வீடுகள் குறைவாகவே உள்ளது. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டே கொலையாளிகள் இருவரை யும் கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    கொலையாளிகள் பவுலின் மேரி, திரேசம்மாளுக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    • வட மாநில வாலிபர் கொலை பரபரப்பு தகவல்
    • 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    கோவை,

    மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் முசாப்பூர் மாலிக் ( வயது 24). இவர் கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில்3-வது மாடியில் வசித்து வந்தார்.

    இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த மான்வா என்கற ஆனந்தகுமார் (27) என்பவரும் வசித்து வந்தார். 2 பேரும் துணிகளுக்கு எம்பிராய்டரி போடும் தொழில் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கோவையில் வசித்து வந்த நஜிபுல் சேட் (45) என்பவரிடம் மாத சம்ப ளத்திற்கு வேலைசெய்து வந்தனர்.

    கடந்த 11 மாதமாக நசிபுல் சேட், முசாப்பூர் மாலிக்கிற்கு சம்பளம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் நசிபுல் சேட், அவரது மகன் அனிஷேக் (19) ஆகியோர் முசாப்பூர் மாலிக் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

    அங்கே இருந்த அவரிடம் நாங்கள் சம்ப ளம் நாங்கள் தரும்போது வாங்கிக் கொள்ளவும். ஏதாவது பிரச்சினை செய்தால் நடப்பதே வேறு. எங்களை எதிர்த்து வாழ முடியாது. எங்கே போனாலும் உனக்குபணம் கிடைக்காது என மிரட்டியுள்ளனர்.அதற்கு முசாப்பூர் மாலிக், "சம்பளம் கொடுத்தே தீர வேண்டும். நான் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும். என்னை ஏமாற்ற நினைத்தால் விடமாட்டேன் என கூறி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நசிபுல் சேட்டும்அவரது மகன் அனிஷேக்கும் சேர்ந்து முசாப்பூர் மாலிக்கை தாக்கினர். பின்னர் தலையை சுவற்றில் மோதி அடித்தனர். தொடர்ந்து அவர்கள் வாளி தண்ணீரில் தலையை அழுத்தி மூச்சுத்திணற வைத்து கொலை செய்தனர்.

    அப்போது அந்த அறையில் ஆனந்தகுமார் இருந்தார். தடுக்க வந்த அவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதில் பயந்துபோன ஆனந்தகுமார் எதுவும் செய்யவில்லை. இங்கே இருந்தால் கொலை செய்ததை சொல்லி விடுவார் என நினைத்து அவரை கட்டாயப்ப டுத்தி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை சம்பவம் நடந்த பின்னர் மேற்கு வங்கம் சென்ற ஆனந்தகுமார் திரும்ப வரவில்லை. சில நாட்களுக்குப் பின்னர் அழுகிய நிலையில் முசாப்பூர் மாலிக் உடல் கைப்பற்றப்பட்டது.

    இது குறித்து ஆர்.எஸ் புரம் போலீ சார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவை திரும்பி வந்த ஆனந்தகுமார் ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் அளித்தார்.

    இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி கொலை வழக்குப்பதிவு செய்து ஐதராபாத்தில் பதுங்கி இருந்த நசிபுல் சேட், அனிஷேக் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவை ஜே.எம் எண் 1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தி அனுமதி அளித்தார். நேற்று முன்தினம் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    "முசாப்பூர் மாலிக் எங்களது உறவினர். அவருக்கு தேவையான உணவு வசதிகளை செய்து கொடுத்தோம். ஆனால் அவர் சம்பள பணம் கேட்டு தொந்தரவு கொடுத்தார். மிரட்டினால் போய் விடுவார் என நினைத்தோம். ஆனால் அவர் எங்களை கேவலமாக பேசி மிரட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விசாரணை முடிந்ததும் தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 2 பேரையும் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

    • தினமும் தனது கால்நடைகளுக்கு அக்கம்மாள் அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்று புல் அறுத்து வருவது வழக்கம்.
    • மூதாட்டியை கொன்று நகையை கொள்ளைடித்து சென்றது பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூர் சுள்ளாமணி கரை பகுதியைச் சேர்ந்தவர் மலை கொழுந்தன் (வயது 72), விவசாயி. இவரது மனைவி அக்கம்மாள் (65). இந்த தம்பதிக்கு சிறும்பாயி, அய்யினாள் என்ற 2 மகள்களும், வைரமணி என்ற மகனும் உள்ளனர்.

    இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்த நிலையில் அவர்கள் உள்ளூரிலேயே தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்கள். மகனுக்கும் திருமணமாகி அங்கேயே உள்ளார். இதனால் கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

    மேலும் அவர்களுக்கு விவசாய நிலம் இருந்தபோதிலும் இருவரும் ஆடு, மாடு வளர்த்து வருகிறார்கள். தினமும் தனது கால்நடைகளுக்கு அக்கம்மாள் அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்று புல் அறுத்து வருவது வழக்கம். நேற்றும் அதே போன்று மதியம் 3 மணிக்கு தன் வீட்டிற்கு அருகில் உள்ள சோளக்காட்டுக்கு புல் அறுக்க அக்கம்மாள் சென்றுள்ளார்.

    வழக்கமாக மாலையில் திரும்பி விடுவார். ஆனால் நேற்று இரவு வரை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது கணவர் மற்றும் மகன், மகள்கள், அக்கம்பக்கத்தினர் அவரை தேடிச்சென்றனர். விடிய, விடிய அவர் சென்ற பகுதிகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அக்கமாளை தேடி மகள் வழி பேரன் தினேஷ் குமார் சென்றார். அப்போது வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணிவேல் என்பவரது சோளக் காட்டுக்குள் தன்னுடைய பாட்டி பிணமாகக் கிடப்பதை பார்த்து கூச்சலிட்டார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்த போது, அக்கம்மாள் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயின் மற்றும் தோடு, தாலி ஆகியவற்றை காணவில்லை. மேலும் அவர் அணிந்திருந்த மூக்குத்தியை கழட்ட முடியாததால் மூக்கிலேயே கத்தியால குத்தி அதை கழற்ற முற்பட்டுள்ளனர்.

    அப்படியும் கட்ட முடியாததால் மூக்குத்தி மட்டும் அவரது உடலுடன் இருந்துள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்து சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட அக்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் மற்றும் ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பரவாசுதேவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மலைக் கொழுந்தன், அக்கம்மாள், அவருடைய மகன் வைரமணி ஆகியோர் தங்களுக்கு சொந்தமான வயல் மற்றும் வீடு ஆகியவற்றை விற்று வீட்டு குளித்தலை அய்யர்மலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வயல் மற்றும் இடம் வாங்கி வீடு கட்டி வந்துள்ளனர்.

    நாளை அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து பால் காய்ச்சுவது என முடிவு செய்திருந்தனர். அதனால் இன்று அவர்கள் ஆடு, மாடு மற்றும் வீட்டுச் சாமான்கள் ஆகியவற்றை இன்று அந்த புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக இருந்தனர். இதற்கிடையேதான் அக்கம்மாள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளியாட்கள் யாரும் நுழைய முடியாமல் பாதுகாப்பு அரணாக இருந்த கிராமத்தில் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியை கொன்று நகையை கொள்ளைடித்து சென்றது பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • விஷ்ணு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அறிவழகன் மற்றும் அவரது மனைவி அமுதாவை தாக்கியதாக தெரிகிறது.
    • காஞ்சிபுரத்தில் நாய் குரைத்த தகராறில் ‘டாட்டூ’ கலைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், ராஜகோபால் பூபதி தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி அமுதா. இவர்களது மகன் சரண்சிங். டாட்டூ கலைஞர். இவர் காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகே டாட்டூ கடை நடத்தி வந்தார்.

    இவர்களுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஷ்ணு என்பவர் குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது விஷ்ணு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அறிவழகன் மற்றும் அவரது மனைவி அமுதாவை தாக்கியதாக தெரிகிறது.

    இதுபற்றி அறிந்ததும் சரண்சிங் ஆத்திரம்அடைந்தார். அவர் தனது பெற்றோரை தாக்கியதை கண்டித்து விஷ்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்ணு, அவரது தாய் சித்ரா, தம்பி சிவா மற்றும் 3 நண்பர்கள் சேர்ந்து சரண்சிங் குடும்பத்தினரை கடுமையாக தாக்கினார். மேலும் கத்தரிக்கோல், ஸ்குரு டிரைவரால் சரண் சிங்கை குத்தினர். இதனை தடுக்க முயன்ற அவரது தந்தை அறிவழகன், தாய் அமுதா, சகோதரி சவுமியா ஆகியோருக்கும் குத்து விழுந்தது. இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

    அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்சிங் உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகாஞ்சி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக விஷ்ணு, அவருடைய தாய் சித்ரா, தம்பி சிவா ஆகிய 3பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஷ்ணு வீட்டில் உள்ள நாய் அதிகமாக குரைத்து உள்ளது. இதனை பக்கத்து வீட்டில் வசித்த சரண்சிங் கண்டித்து உள்ளார். மேலும் விஷ்ணுவின் பாட்டி, பாக்கு இடிக்கும் சிறிய உரலின் சத்தம் குறித்தும் கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் ஏற்பட்ட மேதலில் சரண்சிங் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாழப்பாடி அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் மகன் கோகுல்நாத் (வயது 28). இவர் நேற்றுமுன்தினம் இரவு வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியிலுள்ள தனியார் உணவகத்தில் குடும்பத்துடன் உணவு சாப்பிட்டுள்ளார்.

    அப்போது, அங்கிருந்த மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், தங்கராஜ், சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ், ஜெகதீஸ் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து கோகுல்நாத்தை தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து கோகுல்நாத் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலை செய்யப்பட்ட முத்துச்சாமியின் உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • முத்துச்சாமி கொலை செய்யப்பட்ட விபரம் குறித்து அவரது மகள்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே முதியவரை வெட்டிகொன்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள அம்பிளிக்கை போல்நாயக்கன்வலசு பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி(76). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி இறந்துவிட்டார். 3 மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

    முத்துச்சாமி எலுமிச்சை, முருங்கை, புளி உள்ளிட்ட விவசாயம் செய்து வந்தார். நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியில் கட்டிலில் தூங்கிகொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்துள்ளனர்.

    பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து முத்துச்சாமியையும் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு சென்றுள்ளனர்.

    இன்று காலையில் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது முத்துச்சாமி ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அம்பிளிக்கை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு எஸ்.பி சீனிவாசன், டி.எஸ்.பி முருகேசன், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.

    கொலை செய்யப்பட்ட முத்துச்சாமியின் உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முத்துச்சாமி வீட்டில் நகை மற்றும் பணம் இருப்பதை அறிந்த நபர்கள்தான் இச்செயலில் ஈடுபட்டிருக்ககூடும் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இருந்தபோதும் சாதாரணமாக வீட்டின் சுவற்றை தாண்டி செல்ல முடியும் நிலையில் எதற்காக மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கினார்கள் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    முத்துச்சாமி கொலை செய்யப்பட்ட விபரம் குறித்து அவரது மகள்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்தபிறகுதான் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் எவ்வளவு என்பது தெரியவரும். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • முதியவர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
    • நெல்லை மாவட்டம் உவரி அருகே முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தம்பி மகனை போலீசார் கைது செய்தனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள ராமன் குடி கீழத்தெருவை சேர்ந்தவர் மூக்கன் என்ற கணேசன் (வயது 70).

    இவர் அதே பகுதியில் உள்ள தனது பூர்வீக இடத்தில் மகளுடன் வசித்து வந்தார். இவரது உடன்பிறந்த தம்பி மகன் நாகலிங்கம் என்ற பாக்கியராஜ் (35).

    இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று மாலை ராமன் குடிக்கு வந்த பாக்கியராஜ் தனது பெரியப்பாவிடம் தனக்கு வீடு கட்ட இடம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கணேசன் மறுத்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பாக்கியராஜ் அரிவாளால் கணேசனின் தலையில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக அவர் இறந்தார்.

    இதுதொடர்பாக பாக்கியராஜை உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் உள்ள மின் கம்பத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் உள்ள மின் கம்பத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது பாக்கெட்டில் மாம்பலத்தில் இருந்து திருத்தணி செல்வதற்கான மின்சார ரெயில் டிக்கெட் இருந்தது. அவர் யார்? என்பது தெரிய வில்லை.

    தூக்கில் கிடந்த இடத்தில் இறந்தவரின் கால் தரையில் படும்படி காணப்பட்டது. உடலில் காயங்கள் இல்லை. எனவே மர்ம நபர்கள் அவரை கடத்தி கொலை செய்து விட்டு உடலை தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்களின் விவரத்தை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் போலீஸ்காரர் உள்பட 7 பேருக்கு தேனி கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

    தேனி:

    தேனி அருகே வீரபாண்டி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் மந்திரி.தேனி யூனியன் அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன். உறவினர்களான இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. எனவே இதுதொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கோடீஸ்வரன், மனைவி தெய்வக்கனி, மகன் ரமேஷ்குமார், உறவினர்கள் செல்வம், செல்வராணி, கோபிகண்ணன், சந்திரா, மலைச்சாமி ஆகியோருடன் சேர்ந்து மந்திரியை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்தில் இறந்தார்.

    இதுதொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து கோடீஸ்வரன் உள்பட 8 பேரை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கு நடைபெறும் போது மலைச்சாமி இறந்து போனார்.

    இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு கூறினார். குற்றம்சாட்டப்பட்ட கோடீஸ்வரன், ரமேஷ்குமார், தெய்வக்கனி உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார். ஆயுள்தண்டனை விதிக்கபட்ட ரமேஷ் குமார் போலீஸ்காரர் பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏரல் அருகே இரட்டைக்கொலை தொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
    ஏரல்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் வீரன் சுந்தரலிங்கம் நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது 28). பிரபல ரவுடியான இவர் கடந்த 24-ந்தேதி இரவில் ஏரல் அருகே மேல மங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரை சுடுகாட்டு பகுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வினோத் தன்னுடைய நண்பரான ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தெருவைச் சேர்ந்த தனுஷ் கோடியின் (30) மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதும், இதனை அறிந்த தனுஷ்கோடி தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து வினோத்தை கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவான தனுஷ்கோடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் வினோத் கொலை செய்யப்பட்ட அன்று அவரது நெருங்கிய நண்பரான குரும்பூரை அடுத்த கள்ளம் பாறை ராமச்சந்திரன்(22) என்பவரும் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் நேற்று வினோத் உடல் கிடந்த இடம் அருகே ஆற்றில் அமலைச்செடிகளுக்கு நடுவே மீட்கப்பட்டது.

    இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவரையும் தனுஷ் கோடி கும்பலே கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்த‌து. இதையடுத்து போலீசார் இரட்டை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வினோத், ராமச்சந்திரன் இரட்டை கொலை வழக்கில் கூலிப்படைக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடி தன்னுடைய நண்பர்களான வினோத், ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் வழக்கமாக மது அருந்தும் இடத்துக்கு வரவழைத்து, கூலிப்படையை ஏவி, அவர்களை தீர்த்து கட்டி இருக்கலாம். பின்னர் கூலிப்படையினர் அவர்களது உடல்களை தனித்தனியாக வீசிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    தனுஷ்கோடி, வினோத், ராமச்சந்திரன் ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் இரவில் அடிக்கடி மணல் கடத்தியதாக கூறப்படுகிறது. எனவே, மணல் கடத்தலில் ஏற்பட்ட தகராறில் இரட்டைக் கொலை நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடியை கைது செய்த பின்னரே இந்த இரட்டை கொலை வழக்கில் மேலும் தகவல்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இதற்கிடையே, இரட்டைக்கொலை தொடர்பாக மேலமங்களகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து(26), வெள்ளூரை சேர்ந்த முத்துமுருகன்(26) ஆகிய 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். இவர்கள் தனுஷ்கோடியின் நண்பர்கள் ஆவர். கைதான 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு காரணம் என்ன? இரட்டைக் கொலையில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews
    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி, 3 மாதத்திற்கு பிறகு துப்பு துலங்கியதால் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    ஆற்காடு:

    ஆற்காடு அருகே தாஜ்புரா ஏரிக்கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மீட்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ஆற்காடு பூபதி நகரை சேர்ந்த ரவி (வயது 45) என்ற தொழிலாளியை காணவில்லை என அவரது மனைவி மாரி (38), ஏற்கனவே ஆற்காடு தாலுகா போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

    அதன்பேரில் போலீசார் தாஜ்புரா ஏரிக்கரையில் கிடந்த பிணத்தை மாரியை அழைத்து சென்று காண்பித்தனர். அவர் பிணமாக கிடப்பவர் எனது கணவர் இல்லை என்றார். பின்னர் பிணத்தை வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், ரவியின் மனைவி மாரி திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த ரவி மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மாரியும் கள்ளக்காதலன் முருகனும் ரவியை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி குடிபோதையில் இருந்த ரவியை மாரியும், முருகனும் சேர்ந்து விறகுகட்டையால் அடித்து கொலை செய்து தாஜ்புரா ஏரிக்கரையில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து மாரி, முருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சூளகிரி அருகே கள்ளக்காதலி வீட்டில் தங்கியிருந்த மின்வாரிய ஊழியர் கொலை செய்யப்பட்ட நிலையில் பாழடைந்த வீட்டின் முன்பு பிணமாக கிடந்தார்.
     வேப்பனஹள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த குண்டுகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரலப்பா. இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றினார். சில பிரச்சினைகள் காரணமாக கடந்த 3 மாதத்துக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இதனால் ஊர்சுற்றி வந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விதவை பெண் சாக்கம்மா (வயது48) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. பெரும்பாலான நாட்களில் தனது வீட்டில் தூங்காமல் கள்ளக்காதலி வீட்டிலேயே சக்கரலப்பா தங்கி வந்தார்.

    நேற்று இரவு கள்ளக்காதலி வீட்டில் தங்கி இருந்த சக்கரலப்பா இன்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள பாழடைந்த வீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக அவரது கள்ளக்காதலி சாக்கம்மாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று இரவு கள்ளக்காதலிக்கும், சக்கரலப்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் சாக்கம்மாவுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட சக்கரலப்பா வேறு ஒரு இடத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு அவரது பிணத்தை தரதரவென்று இழுத்து வந்து பாழடைந்த வீட்டில் போட்டு சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    கொலை செய்யப்பட்ட சக்கரலப்பாவுக்கு லட்சுமம்மா (35) என்ற மனைவியும், சேகர் (19) என்ற மகனும், ஷில்பா (21) என்ற மகளும் உள்ளனர்.

    சக்கரலப்பா தொடர்பு வைத்திருந்த சாக்கம்மாவுக்கு ஷில்பா, ரூபா என்ற 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. சாக்கம்மாவின் கணவர் சந்திரப்பா கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் வீட்டில் தனியாக வசித்த சாக்கம்மாவுக்கு கொலை செய்யப்பட்ட சக்கரலப்பா பண உதவிகள் செய்து வந்தார்.

    கடந்த 3 மாதமாக சஸ்பெண்டில் இருப்பதால் அவருக்கு பண கஷ்டம் இருந்து வந்தது. இதனால் கள்ளக்காதலிக்கு சரியாக பண உதவிகள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கள்ளக்காதலி கொன்றாரா? அல்லது வேறு யாரும் அடித்து கொன்று பிணத்தை வீசிவிட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×