search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97500"

    • காயமடைந்த தீபாவை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தீபா கொடுத்த புகாரின்பேரில் கவுதமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த முட்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் தீபா (வயது 28). இவருக்கும், நாகர்கோவிலை சேர்ந்த கவுதமன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே அவர்கள் பிரிந்தனர். இந்தநிலையில் நேற்று காலை தீபா, சுகாதார நிலையத்தில் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த கவுதமன், திடீரென தீபாவை சரமாரியாக தாக்கினார். வலியால் துடித்த அவர் அங்கிருந்து வெளியேறி அருகே இருந்த வீட்டுக்குள் ஓடினார். ஆனாலும் கவுதமன் அவரை துரத்தி சென்று தாக்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து தலைவாசல் போலீசில் ஒப்படைத்தனர்.

    மேலும் காயமடைந்த தீபாவை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீபா கொடுத்த புகாரின்பேரில் கவுதமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராம்குமாரை மடக்கிய கும்பல் கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
    • சின்னாளபட்டி போலீசில் ராம்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ராம்குமார்(39). இவர் ஊராட்சி வார்டு உறுப்பினராக உள்ளார். மேலும் பா.ஜனதா ஓ.பி.சி அணி மாவட்ட செயலாளராக உள்ளார். அப்பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. ராம்குமார் தனது உறவினர் விக்னேசுடன் திருவிழாவிற்கு சென்றார். பின்னர் 2 பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தப்பிஓட முயன்றனர். ஆனால் ராம்குமாரை மடக்கிய கும்பல் கட்டையால் சரமாரியாக தாக்கினர். மேலும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசில் ராம்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடந்தது தெரியவந்துள்ளது.

    மேலும் அவரை தாக்கிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காயமடைந்த ராம்குமார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விறகுகளை வைப்பதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
    • வாசுகியின் ஸ்கூட்டரை தீயில் தள்ளி விட்டு எரித்ததாக கூறப்படு கிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவி நடுஓடுதுறை பிள்ளை யார் கோவில் தெருவில் வசிப்பவர் வாசுகி (வயது30). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜசேகர் (50). இவர் ரியல் எஸ்டே தொழில் செய்து வருகிறார். இரு வர்கள் வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் மரபொருட்கள், விறகுகளை வைப்பதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில், சம்பவத் தன்று இருவரும் தங்கள் பொருட்கள் போட்டு வைத்திருந்த இடத்தில் குப்பைகளை எரித்ததாக கூறப்படுகிறது. இதில் இரு வருகும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது, ராஜசேகர், வாசுகியை மரக்கட்டையால் தாக்கி, வாசுகியின் ஸ்கூட்டரை தீயில் தள்ளி விட்டு எரித்ததாக கூறப்படு கிறது.

    • பஸ் சென்று கொண்டிருந்த போது வறுவேல்ராஜ் கண்டக்டர் பொன்னப்பனிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கையால் தாக்கினார்.

    நாகர்கோவில் :

    கட்டிமாங்கோடு வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பொன்னப்பன் (வயது 51). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர் சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது சரல் பகுதியை சேர்ந்த வறுவேல்ராஜ் (50) என்பவர் பஸ்சில் ஏறினார்.

    ஆசாரிப்பள்ளம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது வறுவேல்ராஜ் கண்டக்டர் பொன்னப்பனிடம் தகராறில் ஈடுபட்டார். பஸ்சை வேகமாக இயக்குமாறு கூறி தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த வறுவேல்ராஜ் கண்டக்டர் பொன்னப்பனை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கையால் தாக்கினார். இதுகுறித்து பொன்னப்பன் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வறுவேல்ராஜ் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • மது குடிக்க பணம் கொடுக்காததால் கும்பல் ஆத்திரம் அடைந்தனர்.
    • இதுகுறித்து கதிரேஷ் கிணத்துக்கடவு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

    பொள்ளாச்சி,

    கோவை அருகே உள்ள கிணத்துக்கடவைச் சேர்ந்தவர் கதிரேஷ் (வயது 24). பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் ஆர்.எஸ். ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு மதுகுடிக்கச் சென்றார்.

    அங்கு அவர் வசிக்கும் பக்கத்து தெருவைச் சேர்ந்த ராசுக்குட்டி (21) என்பவரும், அவரது நண்பர்களான நவீன், இளங்கோ ஆகியோரும் வந்தனர். அவர்கள் கதிரேசிடம் மதுகுடிக்க பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் கதிரேஷ் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்து பணம் கொடுக்க மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராசுக்குட்டி, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் கதிரேசை தாக்கினார். அவருடன் சேர்ந்து அவரது நண்பர்களும் சேர்ந்து கதிரேசை தாக்கி விட்டு அவர் வைத்திருந்த ரூ.2700 பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட கதிரேஷ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்து கதிரேஷ் கிணத்துக்கடவு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசுக்குட்டி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

    • திருமணம் முடிந்த பின்னரும் பல வீடுகளில் கணவன், தனது தாயாரின் பேச்சை கேட்பதால் அடிக்கடி தகராறுகள் ஏற்படுவது வழக்கம்.
    • போலீசார், வாசந்தியின் மருமகள் சுகன்யாவை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்

    மாமியார்-மருமகள் இடையேயான சண்டை ஒரு காலத்திலும் ஓயாது.

    திருமணம் முடிந்த பின்னரும் பல வீடுகளில் கணவன், தனது தாயாரின் பேச்சை கேட்பதால் அடிக்கடி தகராறுகள் ஏற்படுவது வழக்கம்.

    இதில் அதிகம் பாதிக்கப்படுவது மருமகள்கள் தான். இதனால் அவர்களுக்கு கணவன் மீது ஏற்படும் ஆத்திரத்தை விட அவரை பெற்ற தாயார் மீதே அதிக கோபம் ஏற்படும்.

    இதனை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் சில இடங்களில் மருமகள் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு செல்லும் சம்பவங்கள் நடக்கும்.

    அவ்வாறு செல்லும் பெண்ணை, பெண்ணின் பெற்றோர் மறுபடியும் பேசி சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டில் விட்டு செல்வார்கள். அங்கு போனபின்பு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை போல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்.

    இப்படிதான் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாலராமபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் சுகன்யாவுக்கும் நடந்தது. இவரது கணவர், போதைக்கு அடிமையானவர்.

    இதனால் அவர் அடிக்கடி மனைவி சுகன்யாவுடன் தகராறில் ஈடுபட்டார். போதையில் இருந்த கணவரை சுகன்யா திட்டும் போது, அவரது மாமியார் வாசந்தி, சுகன்யாவை கண்டிப்பார். மாமியார், மகனை கண்டிக்காமல், தன்னை திட்டுவதால் அவர் மீது சுகன்யாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மாமியாருக்கு எப்படி பாடம் புகட்டலாம் என சுகன்யா யோசித்தபடி இருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமியார் பால் வாங்க வீட்டில் இருந்து வெளியே சென்றார். காலை நேரம் என்பதால் வீட்டின் அருகே யாரும் இல்லை. சாலையிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

    அப்போது பேன்ட்,சட்டை அணிந்து கையில் இரும்பு கம்பியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மாமியார் வாசந்தியை வழிமறித்தார்.

    அவர் சுதாரிப்பதற்குள் அந்த நபர், வாசந்தியை சரமாரியாக அடித்து உதைத்தார்.அதோடு இரும்பு கம்பியால் காலிலும் அடித்தார். இதில் வாசந்தியின் கால் எலும்பு முறிந்து ரத்தம் கொட்டியது. வலியில் அவர் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கதினர் ஓடிவந்தனர். அவர்களை கண்டதும் வாசந்தியை தாக்கிய நபர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.

    இதுபற்றி வாசந்தி, பாலராமபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, வாசந்தியை தாக்கிய மர்ம நபரை தேடி வந்தனர்.

    இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் மர்ம நபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதையடுத்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 40 கண்காணிப்பு கேமிரா காட்சிகைள கைப்பற்றி ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர்.

    இதில் வாசந்தியை தாக்கியது ஆண் அல்ல, ஆண் வேடமிட்ட பெண் என்பது தெரியவந்தது. அதிர்ந்து போன போலீசார், பெண் எதற்காக ஆண் வேடமிட்டு சென்று வாசந்தியை தாக்க வேண்டும் என ரகசியமாக விசாரிக்க தொடங்கினர்.

    இதில் மாமியாருக்கும், மருமகளுக்கும் மோதல் இருந்தது தெரியவந்தது. இதனை தெரிந்து கொண்ட போலீசார் வாசந்தியின் மருமகள் சுகன்யாவை அழைத்து விசாரித்தனர்.

    போலீசார் அழைத்ததுமே அவர்கள் தன்னை கண்டுபிடித்து விட்டனர் என்பதை தெரிந்து கொண்ட சுகன்யா, தான் ஆண்வேடமிட்டு சென்று மாமியாரின் காலை அடித்து உதைத்ததை ஒப்புக்கொண்டார். மேலும் போதையில் தகராறு செய்த மகனை கண்டிக்காமல், தன்னை திட்டியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து போலீசார், வாசந்தியின் மருமகள் சுகன்யாவை கைது செய்தனர்.

    • தீபக் சிங்கை கடுமையாக தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
    • இரு தரப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமேதி:

    உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பாஜக தலைவரின் கணவரை, எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அமேதி மாவட்டம் கவுரிகஞ்ச் கோத்வாலி காவல் நிலையத்தில் போலீசாரின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் மற்றும் அவரது ஆதவாளர்கள், பாஜகவைச் சேர்ந்த நகராட்சி தேர்தல் வேட்பாளர் ராஷ்மி சிங்கின் கணவர் தீபக் சிங்கை கடுமையாக தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போலீசார் திணறினர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் கூறுகையில், 'நானும் எனது ஆதரவாளர்களும் காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, தீபக் சிங் வந்து தகாத வார்த்தைகளால் திட்டினார். எனது ஆதரவாளர்கள் சிலரை தாக்கினார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பிரச்சனை ஏற்பட்டது' என்றார்.

    • திருச்சி அருகே கள்ளக்காதல் தகராறில் வெறிச்செயல்
    • வழக்கு பதிந்து குற்றவாளியை தேடி வரும் போலீசார்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பெரிய ராக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி, விவசாயி. இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 35). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்கிற சண்முகசுந்தரம் (55) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெரியசாமி அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும் இனிமேல் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் என்று அவரிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டார். அதன் பின்னர் முருகேஸ்வரியும் கணவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு செல்வத்துடன் பேசுவதை விட்டுவிட்டார்.இந்த நிலையில் முருகேஸ்வரி அங்குள்ள தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது செல்வம் அவருடன் தகராறில் ஈடுபட்டார். இதனைப் பார்த்த பெரியசாமி அவரது உறவுக்கார வாலிபர் சின்னப்பன் ஆகியோர் அங்கு ஓடிச் சென்றனர். பின்னர் ஏற்பட்ட தகராறில் செல்வம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பெரியசாமி, சின்னப்பன் ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.இதில் பெரியசாமிக்கு முகத்திலும், சின்னப்பனுக்கு வலது கையிலும் காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து முருகேஸ்வரி கணவர் மற்றும் அந்த வாலிபரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகின்றனர்.

    • வாலிபர் மீது தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    • எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் இந்திரா காலனியை சேர்ந்தவர் கருத்தபாண்டி(வயது45). இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு அந்தப்பகுதியில் நடந்து வந்தார். அப்போது 2 நாய்களும் சண்டையிட்டு கடித்துக்குதறியது. இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் கருத்தபாண்டியை, ராம்குமார், அவரது தந்தை கனகராஜ், உறவினர் மாரிமுத்து ஆகியோர் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த கருத்தபாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் நாகராஜ்(வயது50). இவரிடம் அருப்புக்கோட்டை தும்முசின்னம்பட்டியை சேர்ந்த குருசாமி என்பவர் ரூ. 90 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அதனை அவர் திருப்பித்தரவில்லை. சம்பவத்தன்று அருப்புக்கோட்டைக்கு வந்த நாகராஜ் கடனை திருப்பித்தருமாறு குருசாமியிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் குருசாமி, நாகராஜை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசாமியை கைது செய்தனர்.

    • ஆகாஷ் உள்ளிட்ட 3 பேரும், செந்தில்வேலிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர்.
    • செந்தில்வேலை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது22), கட்டிட தொழிலாளி.

    தொழிலாளி தாக்குதல்

    இவர் கடந்த 25-ந்தேதி சாத்தான்குளம் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றார். சாத்தான்குளம் அருகே ஆத்துபாலம் அருகில் சென்றபோது சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்துரு மற்றும் லிங்கம் மகன் அழகு, சடையன்கிணறு இசக்கிமுத்து மகன் ஆகாஷ்(22) ஆகிய 3 பேரும் செந்தில்வேலை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள், செந்தில்வேலிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் பீர் பாட்டில் மற்றும் கைகளால் தாக்கியதுடன், அருகில் உள்ள கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். இவர்களில் ஆகாஷை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

    • அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடந்தது.
    • சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

    மதுரை

    மதுரை அய்யப்பநாயக் கன்பட்டி ஊரணி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 43), அரசு பஸ் டிரைவர். மகாலிங்கம் சித்திரை திருவிழாவை யொட்டி பணியில் இருந்தார். அப்போது திண்டுக்கல் ரோடு பஸ் நிறுத்தம் அருகில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சை வழிமறித்தனர்.

    இதனை மகாலிங்கம் கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த 2 ேபரும் உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக மகாலிங்கம் செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • முதுநிலை மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் பேராசிரியை ஒருவருடன் தியேட்டருக்கு சென்று விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • ஸ்டான்லி ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ரேடியோலஜி முதுநிலை இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர் நேற்று இரவு தியேட்டரில் படம் பார்த்து விட்டு கல்லூரி விடுதிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த இளநிலை மருத்துவம் 4-ம் ஆண்டு படித்து வரும் 10 மாணவர்கள் சேர்ந்து அவரை தாக்கினர்.

    இதில் முதுநிலை மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் பேராசிரியை ஒருவருடன் தியேட்டருக்கு சென்று விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×